ரூ.5 கோடி 'அபேஸ்'
ம ண் வாரி எந்திரங்கள் தயாரிக்கிற கனரக தொழிற்சாலையில் ஒரு சங்கத்தில 5 கோடி ரூபாய்க்கும் அதிகமா மோசடி செய்ததாக ஆடிட்டிங்கி-ல் கண்டுபிடிச்சிருக்காங்க. ஓய்வுபெற்ற சங்கத் தலைவரை, 'கிடுக்கிப்பிடி' போட்டு தாளிச்சாங்களாம். இதனாலேயே உடல் நல பாதிப்பு ஏற்பட்டதாகவும் சொல்றாங்க.
இந்த விபரம் கோல்டு சிட்டி ஆலமர பகுதியில் துவங்கி, மா.குப்பம் தென் பகுதி வரைக்கும் எரிமலை எப்படி பொறுக்கும்; சும்மா பற்றி எரியுது. இந்த ஊழல் முறைகேடு விவகாரத்தில் மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளி வந்தே தீருமென பேசுறாங்க. கணக்கு படி முழு தொகை எங்கே சொல்லு. அவைகளை ஒப்படைக்க வேண்டுமென சங்க மத்திய குழு உருட்டுறாங்களாம்.
எஸ்.ஐ., வேண்டாமா?
கோ ல்டு சிட்டியின் ரா.பேட்டை காக்கி ஸ்டேஷனுக்கு எஸ்.ஐ., இல்லாமல் ஆறு மாதத்துக்கு மேலாகுது. மத்த ஸ்டேஷன்களில் இருந்து தான், 'எக்ஸ்ட்ரா டியூட்டி' பார்க்க செய்றாங்களாம். அந்த பணியிடம் காலியாகவே இருப்பதாக சொல்றாங்களே. தொகுதியோட, அதிலும் ஒரு தாலுகாவோட காக்கியின் ஸ்பெஷல் மாவட்டத்தோட ஸ்டேஷனுக்கு எஸ்.ஐ., இல்லாம காலம் தள்ளலாமான்னு கோல்டு சிட்டியில் யதார்த்தமாக பேசுவோரும் இருக்காங்க.
இங்கு வங்கிகள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கல்லுாரிகள், ஜூவல்லரிகள், தினமும் மக்கள் கூடுகிற பஸ் நிலையம், மார்க்கெட், சர்வமத வழிபாட்டு தலங்கள் இருக்கிற ரா.பேட்டைக்கு எஸ்.ஐ., அவசியம் இல்லையா?
உள்துறையை அசெம்பிளிக்காரர் அணுகி, ஒருவரை நியமிக்க வேணாமா. ஏற்கனவே, கோல்டு சிட்டியில் இருந்த ரெண்டு ஸ்டேஷன்களை நீக்கிட்டாங்க. இதை கேட்க யாரும் இல்லையான்னு சிலர் மட்டுமே அங்கலாய்க்கிறாங்க.
என்ன தான் நடக்குது?
மு னிசி.,க்கு வருவாய் தரும் சட்டப் பிதா பெயரில் உள்ள மார்க்கெட் இடத்தை ஆபீசர்கள் ஒருமுறையாவது பார்த்ததுண்டா. இதுக்கு எப்போ நல்ல காலம் ஏற்படும். இறைச்சி மார்க்கெட்டை புதுப்பிக்க போவதா பல வருஷமா சொல்றாங்க. அது தேய்ந்த ரிக்கார்டாக தான் உள்ளது. இதுக்கு நிதி ஒதுக்கினாங்களா அல்லது ஒதுக்கினதை வேறு திட்டங்களுக்கு மாற்றிட்டாங்களா அல்லது ஏப்பம் போட்டுட்டாங்களா?
முனிசி., யில் மக்கள் பிரதிநிதிகளின் கூட்டம் நடக்குது. அவர்களும் திட்டங்களை போடுறாங்க. அது அமலுக்கு வருதான்னு கவனிக்க மாட்டேங்குறாங்க. எல்லாமே ஆபீசர்களோட அட்ஜெஸ்ட்மென்ட் தானோ?
உறுதியா சொல்வாங்களா?
லா ட்டரியை ஒழித்து பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால் கோல்டு சிட்டியில் புதிதாக கட்டப்படும் குடிசை மாற்று வாரிய வீடுகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்து வழங்குவதாக சொல்றாங்களே. இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
கோல்டு சிட்டியில் 13 ஆயிரம் குடும்பங்களுக்கு சொந்த வீடு இல்லை என்பது மாநிலமே அறிந்த உண்மை. இதுக்காக மா.அரசு திட்டத்தில், முனிசி., மூலம் வீடுகள் வழங்க 35 வார்டுகளிலும் விண்ணப்ப படிவங்களை வாங்கி கட்டி வெச்சிருக்காங்க. இதில் நுாறோ, இருநுாறோ, வீடுகள் கட்டி, அதையும் குலுக்கலில் தான் தேர்ந்தெடுப்பாங்களாம். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியுமுன்னு கேள்வி கேக்கிறாங்க. இதுவும் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவாளர்களுக்கு, ரிசர்வ் ஆகியிருக்காது என உறுதியாக சொல்வாங்களா?