sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

தங்கவயல் செக் போஸ்ட்

/

தங்கவயல் செக் போஸ்ட்

தங்கவயல் செக் போஸ்ட்

தங்கவயல் செக் போஸ்ட்


ADDED : செப் 12, 2025 06:54 AM

Google News

ADDED : செப் 12, 2025 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரீலா.. ரியலா...?

ப ல ஆண்டுகளாக முனிசி., நிலத்தை தனி நபர்கள் ஆக்ரமிப்பு செய்துள்ளதை மீட்கும் பணிகள் துவங்கி இருக்குது. கோர்ட் பக்கத்தில், தாலுகா ஆபீசின் வலது புறத்தில் இருக்கும் முனிசி.,க்கு சொந்தமான நிலத்தில் தனிநபர் கட்டடத்தைக் கட்டி சொந்தம் கொண்டாடி வந்ததை முனிசி.,யின் புதிய பெரிய ஆபீசரு, ஜேசிபி இயந்திரத்தால் இடித்து தள்ள வெச்சிட்டாரு.

அந்த இடத்தில் முனிசி, காம்ப்ளக்ஸ் கட்டப்போவதாக நிலைக் குழு தலைவர் சொன்னாரு. ஏற்கனவே, பஸ் நிலையத்தில் சில கோடிகள் செலவு செய்து கட்டப்பட்ட அடுக்குமாடி வணிக வளாகம், பல வருஷமா சும்மா மூடி வெச்சிருக்காங்களே. இவங்களுக்கு அதை பற்றி ஞாபகம் இருப்பதா தெரியல.

பழைய மாட்டுவண்டி நிலையத்தை இடித்து வணிக வளாகம் கட்டப்பட்டதே. அதுவும் மூடியே கிடக்குதே; அது யாருடைய சொத்து. ஏன் இதன் பேரில் நடவடிக்கை எடுக்கல. இந்த லட்சணத்தில மேலும் ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டுவதாக சொல்ல இவங்களுக்கு எப்படி தான் மனசு வருதோ. எல்லாமே ரீலா.. ரியலா.

மார்க்கெட் யாருக்கு சொந்தம்?

ரா .பேட்டை புல்லு மார்க்கெட்டை, 100 கோடி செலவுல மாநில கேபிடல் சிட்டி கே.ஆர். மார்க்கெட் போல கட்ட உலக வங்கியிடம் கடன் வாங்க போவதாக முனிசி.,யில் பேசினாங்க. பேசின வார்த்தைகள் காற்றோடு கரைந்து போய் விட்டதா. இதை எல்லா உறுப்பினர்களுமே, 'ஓகே' சொன்னாங்களே... ஞாபகம் இருக்கா?

இந்த புல்லு மார்க்கெட் பகுதியில் பொழுது விடியும் முன்னே, அதிகாலை வேளையில் அங்கு திருட்டுத்தனமாக மதுபான விற்பனைக்கு ஏற்ற இடமாக மாறியிருக்குதே; இதை ஏன் பொறுப்பானவங்க தடுக்கல.

ஏன்னா போக வேண்டிய இடத்துக்கு மாமூல் போவதால் யாரும் ஒண்ணும் செய்ய முடியலயோ. இந்த புல்லு மார்க்கெட் யாருக்கு சொந்தமானது. முனிசி.,க்கு சொந்தமான தென்றால் இன்னும் ஏன் கையகப் படுத்த அச்சம்.

பதவிக்காலம் முடிய போகுது!

ந கராட்சி கவுன்சிலின் ஐந்தாண்டின் பதவிக் காலம், இன்னும் ஒரு மாதத்தில் முடியப் போகுது. மாறி மாறி பதவிக்கு வந்த 10 கமிஷனர்கள், 2 தலைவர்கள், இடையில் ஒன்றரை ஆண்டுகள் மாவட்ட கலெக்டர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 35 கவுன்சிலர்கள், அதிகாரத்தில் ஐந்து ஆண்டுகளாக இருந்தாங்க.

இவர்கள் நகர வளர்ச்சிக்கு மேற்கொண்ட சாதனைகளை, பொதுமக்கள் அலசுறாங்க. நகராட்சி எல்லை ஆரம்பம், முடியும் பகுதிகளில் நகராட்சி வளைவு ஏற்படுத்தல. 35 வார்டுகளிலும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு தருவதாக விண்ணப்பம் வாங்கி மூட்டை கட்டினார்களே. ஒருத்தருக்காவது வீடு கிடைக்க உத்தரவாதம் வந்ததா. வீட்டுரிமை பத்திரம் தந்தாங்களா. எதுவுமே கிடைக்கல.

தெருநாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தல. பல ஆண்டுகளாக மூடியே கிடக்கும் நவீன கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கல. ஆனா, அடுத்த தேர்தலை இவங்களும் எதிர்பார்க்குறாங்க.

வாகன நிறுத்துமிடம் எங்கே ?

த ங்க நகரில் இருசக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். ஆனால், நகரில் வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லையே. போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. நடைபாதைகள் எல்லாம் வாகனங்கள் மயமாக காணலாம். ஜனங்க நடமாட முடியல. 60 ஆண்டுகளை கடந்த கோல்டு சிட்டியின் முனிசி., யினருக்கு, ரா.பேட்டையில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க இடமா கிடைக்கல.

புல் மார்க்கெட் பகுதியில் வாகன நிறுத்துமிடத்துக்கு இடம் ஒதுக்கினதா, பெயர் பலகை வைத்தாங்களே. அந்த திட்டத்தை நிறைவேற்ற ஏன் அக்கறை காட்டல.

பொதுமக்களுக்கு இடைஞ்சலாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை மெயின் ரோடுகள், கிராஸ் ரோடுகளின் நடைபாதைகளில், பஸ் நிலையத்தில், மார்க்கெட் பகுதிகளில் நிறுத்துறாங்களே, இதுக்கு விமோசனம் கிடையாதா?






      Dinamalar
      Follow us