sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 தங்கவயல் செக் போஸ்ட்

/

 தங்கவயல் செக் போஸ்ட்

 தங்கவயல் செக் போஸ்ட்

 தங்கவயல் செக் போஸ்ட்


ADDED : மார் 26, 2026 12:45 AM

Google News

ADDED : மார் 26, 2026 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எது போலி, எது அசல்?

உ ரிகம்பேட்டையில், ' கை' கட்சியின் மூத்த தலைவரோட வீட்டு மனையை யாரோ ஆட்டைய போட்டுட்டாங்களாம். அதிலும், அவர் மூன்று முறை நகராட்சி உறுப்பினராகவும், 'குடா' சேர்மனாகவும் இருந்தவரு. சி.எம்., செக்ரட்ரியோட தோழர். இவ்வளவு அரசியல் செல்வாக்கு உள்ளவர் கண்ணில் மிளகாய் பொடி துாவிட்டாங்களேன்னு முனிசி., வட்டாரமே பேசுது. அதிலும், அவங்க ஆட்சியிலேயை கையை வெச்சதுதான் ஜுரணிக்க முடியலயாம்.

இது யாருடைய வேலை. இதன் பின்னணி யார். சும்மா விடப்போவதில்லை என்று காட்டுக்கூச்சல் போடுறாங்க. கை கட்சி அசெம்பிளிக்காரர் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறாரோ. எங்கும், எதிலும் ஊழல், முறைகேடு என்பதற்கு வேறென்ன உதாரணம் தேவையோ. ஜனங்களே உஷார்... காலி மனையாக இருந்தால் அதனை உறுதி படுத்திக் கொள்ளுங்கள். இதே போன்று, எத்தனை பேரிடம் பட்டா இருக்குதோ.

கண்டமாக மாறப்போகிறது!

கோ ல்டு சிட்டியில்ல 30 கோடியில் தெரு மின்விளக்கு வசதி ஏற்படுத்தியதா கணக்கு காட்டுறாங்க. 30 சதவீத கமிஷன் யார் வீட்டு பெட்டிக்குள் பதுங்கியதோ.

இதில், உள்ளூரு கான்ட்ராக்ட்காரர் யாரும் இல்லையாம். எல்லாமே, 'அவுட் சைடர்' தானாம். தெருவிளக்கு ஒன்றை காட்டி மெஸ்மரிசம் செய்து வருவதாக கைகட்சிக்குள் ஒதுக்கப் பட்டவர்களின் அங்கலாயப்பு.

முனிசி., தேர்தல் வரட்டும் என்று, சீட் எதிர்பார்க்றவங்க சிலர் காத்திருக் காங்க. இது, அந்த கட்சிக்கு பெரிய கண்டமாக மாறப்போகுது. இதனால், கை கட்சிக்குள் உள்ள லீடர்கள் எத்தனை பேர் ஜாகா காலி செய்யப் போறாங்களோ.

சட்டப்பிதா பவனில் சிக்கல்!

ச ட்டப்பிதா கோல்டு சிட்டியில் கால் பதித்த இடத்தில், பல கோடியில் அவர் பெயரில், 'நினைவாலயம்' கட்டுவதாக பெருசா டமாரம் அடிச்சாங்க.

மந்திரியை வரவழைத்து பூமி பூஜையும் போட்டாங்க. ஆனால், அந்த இடம் யாருக்கு சொந்தமானது என, மாநில அரசின் வருவாய்துறை சர்வே எண் பெற்றது.

இது, கோல்டு மைனிங் ஆபீசர்களின் துாக்கத்தை கலைத்து விட்டது. உயர் நீதிமன்றத்தில் இந்த நிலம் குறித்த விபரங்களை ஆதாரங்களுடன் சமர்ப்பித்து இருக்காங்க. ஏற்கனவே இதே நினைவாலயம் கட்டுவதற்கு பெமல் தொழிற்சாலை அருகே, சமூக நலத்துறை நிலம் அடையாளம் காட்டியது. அந்த இடம் தனியார் கம்பெனிக்கு தாரை வார்க்கப்பட உள்ளதால், அதனை மறக்க செய்தார்கள். எதிர்ப்பு கூச்சல் போட்ட நீல வண்ண துண்டுகாரர்களை அடக்கி வைத்தாங்க.

கோல்ப் விளையாட்டு திடலாக இருந்த இடத்தையும் தேர்வு செய்தாங்க. அந்த விளையாட்டு சங்கம் எதிர்த்ததால், சட்ட பிதாவின் எதிரிகள் என்று ஜோடனை செய்து அவர்களை பணிய செய்தாங்க. இப்போது அந்த இடம் மைனிங் பகுதியில் இருப்பதால், அங்கு அடுக்கு மாடி கட்ட முடியாது. அதனை தாங்கும் வல்லமை சுரங்க பூமிக்கு இருக்காதென சொல்லி இருக்காங்க.

சட்டப்பிதா பெயரில் இன்னும் எத்தனை தடங்கலோ. ஏற்கனவே சிமென்ட் சிலையை மாற்ற 15 லட்சம் ஒதுக்க தீர்மானித்த முனிசி.,யின் நடவடிக்கை குறட்டை விடுகிறது.

கோர்ட் பக்கத்தில் சமூக நலத்துறை சார்பில் கட்டப்பட்ட சமுதாய பவன் கட்டடம் திறக்கப்படாமல் 10 வருஷமா ஹைகோர்ட்டில் விசாரணையில் இருந்து வருகிறது.

பாதியில் நிற்கும் குடிநீர் திட்டம்?

ம த்திய அரசின், 'அம்ருத் சிட்டி' குடிநீர் திட்டத்துக்கு, 61 கோடியே 32 லட்சத்துக்கு 2016- - 17 ல் முனிசி.,யில் டெண்டர் விட்டாங்க. மூன்று ஆண்டுகளில் முடிக்க காலகெடுவும் விதிச்சாங்க. ஆனால், அந்த பணிகள் உரிய கால கெடுவுக்குள் முடிந்ததா. இதுவரை, 50 சதவீத வேலை கூட முடியலயே. இதுக்கு யார் தான் பொறுப்பு.

அந்த ஒப்பந்ததாரரை இதுவரை ஏன் அழைக்க வில்லை. ஏன் பிளாக் லிஸ்ட்டில் சேர்க்க வில்லை. பூமிக்குள் பதிக்க வேண்டிய இரும்பு உருளைகள் பல ஆண்டுகளாக சாலையோரங்களில் விழுந்து கிடக்கிறதே, இதைப்பற்றி யார் நடவடிக்கை எடுப்பது. இந்த திட்டத்தில் ஒரு சொட்டு தண்ணீரும் வந்து சேரவே இல்லை. இதுக்கு தானா அரசு நிதி ஒதுக்கியது.

காலி மனைகளில் ஜல்லி மணல் கொட்டி வைத்தாலே, முனிசி., ஆபீசர்கள் துருவி துருவி விசாரிக்கிறாாங்க. ஆனால், பல வருஷமா விழுந்து கிடக்கிற இரும்பு உருளைகள் இவங்க கண்ணுக்கு தெரியலையா. அல்லது எதுக்கு பெரிய இடத்தில் வம்பு என்று பயப்படுறாங்களா.

சமூக ஆர்வலர்களும் இதன் பேரில் கவனம் செலுத்தியதா தெரியலையே. எல்லாமே அட்ஜெஸ்ட்மென்ட்டா.






      Dinamalar
      Follow us