ADDED : ஏப் 29, 2026 12:20 AM
கனவில் மிதக்குறாங்க!
பெ மல் தற்காலிக தொழிலாளர்கள் 26 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி, சல்லிகாசும் பயன் கிடைக்கலன்னு தொழிலாளர்களில் ஒரு குரூப் பேசி வராங்க. மூன்று வருஷத்துக்கு, ஒரு முறை நடத்த வேண்டிய இவங்க யூனியன் எலக் ஷன் 'வேஜ் போர்டு' காரணமாக தள்ளி போயிருக்குதாம்.
இப்போது கிடைக்கிற 18 ஆயிரம் ரூபாயை விட, கூடுதலா 3,000 முதல் 5,000 ரூபாய் கிடைக்கும்னு நம்பி இருக்காங்க. ஆனால் போராட்டம் முடிந்து வெறும் கையுடன் ஏமாந்தது போல ஆகிடுமோ என்ற அச்சமும் சிலருக்கு ஏற்பட்டிருக்குதாம்.
ஏன்னா, கம்பெனியின் 60 ம் ஆண்டு நிறைவுக்கு தங்கநாணயம் எதிர்ப்பார்த்து, ஏமாந்து, சோர்ந்து போனவங்களாச்சே. போராட்டத்தை முன்னின்று நடத்தினவங்க செல்வாக்கு என்ன ஆகுமென தேர்தல் நடந்தால் அதன் முடிவு தான் பதிலை தருமாம். எனவே, தற்காலிக தொழிலாளர்கள் சம்பள உயர்வும், அடுத்த தேர்தலும் எப்போ வருமோ. என்ன கிடைக்குமோ. எல்லாமே கனவில் மிதக்குறாங்க.
மீண்டும் கல்வெட்டு
'மா ஜி' பி.எம்., பெயரின்றி உள் விளையாட்டு அரங்க திறப்பு விழாவை நடத்தி, பெரிய சாதனை என பூக்காரங்களே கொண்டாடினாங்க. மக்களுக்கான விளையாட்டு அரங்கத் தை மக்கள் தலைவர்கள் இல்லாமல் திறந்திருக்காங்க. 'மாஜி' செங்கோட்டை முனி., நெற்றிக் கண்ணைத் திறந்திருக்காரு. இது யாருடைய வேலை என்பதை முழுமையாக ஆராயப்போறாராம். மாஜி பி.எம்., பெயருடன், ஒரு கல்வெட்டு வைக்க போறாங்களாம்.
இருந்தாலும் கோல்டு சிட்டி அசெம்பிளி மேடம் பெயரும் கல்வெட்டில் இடம் பெற வேண்டும் என்று கை கட்சியின் ஒரு கோஷ்டி துடிக்கிறாங்க. பூங்கா மேம்பாட்டுக்கு அசெம்பிளி மேடம் மூலம் மாநில அரசின் பல லட்சம் வாங்கினவங்களுக்கு ஞாபகம் வரலையோ.
மன்னர் அரங்க வளர்ச்சிக்கு அரசு நிதி வேணும். ஆனால், நிதி தருபவர்களை கை விடலாமா. இது தானா மரியாதை. மன்னர் அரங்கம் அரசியல் விமர்சனத்துக்கு ஆளாகுது.
இது ஜனநாயக நாடு. எல்லாமே சட்டத்துக்கு உட்பட்டது தான். ஆனால், ஆபீசரே முடியாட்சி போல அதிகாரம் செலுத்தலாமான்னு மாஜி முனி., எரிச்சலில் இருக்காராம்.
மைனாரிட்டி மாநாடு?
கை கட்சியில் சி.எம்., செயலர் உட்பட 2 பேரின் அதிகாரம் பறிக்கப்பட்டதையும், இன்னும் சிலருக்கு 'அவுட்' கொடுக்க இருப்பதையும் கை வட்டாரத்தில் தடுமாற்றமா பேசுறாங்க. மைனாரிட்டி சமூகம் என்ற ஒரே விஷயத்தை காட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும், நகரங்களிலும் அரசியல் மாநாடு நடத்த தயாராகி வராங்க. இந்த மாநாடு கோல்டு சிட்டியில் நடத்த ஏற்பாடு செய்திருக்காங்க.
இவங்க எல்லாம் கை கட்சிக்கு எதிர்ப்பு அலையாக மாத்தி யோசிக்கிற கூட்டமாக, அமைய போவதாக ஒரு தரப்பினர் அழுத்தம் கொடுத்து பேசுறாங்க. கோல்டு சிட்டி மண்ணின் மைந்தரின் பதவி பறிப்பு, ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது, கலகலப்பா இருந்த கை வட்டாரத்தில் சலசலப்பா மாறிடுச்சு. என்னமோ நடக்குது மர்மமா இருக்குதுன்னு கடை வீதிகளில் பேசுறாங்க.
அரசுக்கு இழப்பு
அ ழிக்கப்பட்ட புல்லுமார்க்கெட் பகுதியில் இருந்த, கடைகளில் பாக்கி வைத்திருந்த ஒன்றரை கோடி ரூபாய் வரையிலான வாடகை வரியை வசூலிக்காமல், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியவர்களை அரசு சும்மா விட்டு விட்டதா. இப்போது, அந்த இடம் தி றந்த வெளியாக காட்சி அளிக்கிறது.
அடுத்த கட்ட நடவடிக்கைக்கு திட்ட அறிக்கை தயாரிக்கும் ரகசிய வேலையும் துவங்கி இருக்குதாம். பொதுக் கூட்டம், மாநாடு நடத்த ஏற்ற வசதியான திறந்த வெளி இடமாக, காலி கிரவுண்டாக மாறியிருப்பதால், அனைவரின் கவனத்தையும் இழுத்துள்ளது. இங்கு கூட்டம் நடத்த அனுமதி வழங்கும் பொறுப்பு யாரிடம் இருக்குதோ.

