தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தங்கவயல் வக்கீல்கள் சங்க தேர்தல் முடிவுகள்

 தங்கவயல் வக்கீல்கள் சங்க தேர்தல் முடிவுகள்

 தங்கவயல் வக்கீல்கள் சங்க தேர்தல் முடிவுகள்


ADDED : டிச 15, 2025 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 04:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: தங்கவயல் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்தலில் தலைவராக ராஜகோபால கவுடா, பொதுச்செயலராக ஆர்.ஜோதிபாசு வெற்றி பெற்றனர்.

தங்கவயல் வக்கீல்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். பல்வேறு காரணங்களால் தேர்தல் நடத்தப் படாமல் இருந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு பின், நேற்று தேர்தல் நடந்தது. நேற்று காலை 9:00 மணி முதல் பகல் 3:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்த ஓட்டுகள் 147; பதிவானவை 146.

ஓட்டுப்பதிவு முடிந்த பின் ஓட்டுகள் எண்ணப்பட்டது. தலைவராக எஸ்.என். ராஜகோபால கவுடா, துணைத் தலைவராக கே.சி.நாகராஜ், பொதுச் செயலராக ஆர்.ஜோதிபாசு, துணைச் செயலராக ஆர்.ஜெகநாதன், பொருளாளராக கே.பிரீத்தி; செயற்குழு உறுப்பினர்களாக எம்.அசோகன், டி.பானு, கே.எஸ்.ராஜசேகர், சி.சிவப்பா, சி.வினோத்குமார், பி.சி.கண்ணன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

வெற்றிப் பெற்றவர்களுக்கு அவரவர் ஆதரவாளர்கள் மாலைகள், சால்வைகள், மைசூரு தலைப்பாகை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us