தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 6 மாதங்களுக்கு பிறகு இன்று தங்கவயல் நகராட்சி கூட்டம்

6 மாதங்களுக்கு பிறகு இன்று தங்கவயல் நகராட்சி கூட்டம்

6 மாதங்களுக்கு பிறகு இன்று தங்கவயல் நகராட்சி கூட்டம்


ADDED : அக் 23, 2025 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2025 11:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: தங்கவயல் நகராட்சி கூட்டம், ஆறு மாதங்களுக்கு பிறகு இன்று நடக்கிறது.

தங்கவயல் நகராட்சி கவுன்சில் தேர்தல் 2019 அக்டோபர் 12ல் நடந்தது. அதே ஆண்டு அக்டோபர் 30ல் நகராட்சி கவுன்சிலின் முதல் இரண்டரை ஆண்டுகள் முனிசாமி தலைவராகவும், தேவி துணைத் தலைவராகவும் பதவியேற்றனர்.

இவர்களின் பதவிக்காலம் முழுமையாக இரண்டரை ஆண்டுகள் முடிந்த பிறகு, அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கான தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஆனால் இந்த பதவிகளுக்கான இட ஒதுக்கீடு விவகாரம், கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு சென்றது. இதனால் தேர்தல் நடத்தப்படாமல், மாவட்ட கலெக்டர் நிர்வாக அதிகாரியாக இருந்து வந்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்ற உத்தரவின்படி நடந்த தேர்தலில் 2024 ஆகஸ்ட் 21ல், தலைவராக காங்கிரசின் இந்திரா காந்தி, துணைத் தலைவராக ஜெர்மன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் ஓராண்டு, இரண்டு மாதங்கள் மட்டுமே முடிந்துள்ளது.

இன்னும் ஓராண்டு 4 மாதங்கள் உள்ளதென கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கவுன்சிலின் மொத்த பதவிக்காலம் ஐந்தாண்டுகள். அது இம்மாதம் 30ல் முடிவடைகிறது. எனவே, இதுவே கடைசி கூட்டமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மாதந்தோறும் நடைபெற வேண்டிய கவுன்சில் கூட்டம் கடைசியாக மார்ச் 26ல் நடந்தது. அதன் பிறகு கவுன்சில் கூட்டம் நடத்தப்படவே இல்லை. இந்நிலையில் இன்று நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க 35 கவுன்சிலர்களுக்கும், நான்கு நியமன உறுப்பினர்களுக்கும் நகராட்சி ஆணையர் ஆஞ்சநேயலு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us