/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயல் மகளிர் மன்றம் 40ம் ஆண்டு விழா
/
தங்கவயல் மகளிர் மன்றம் 40ம் ஆண்டு விழா
ADDED : ஜூன் 17, 2025 08:18 AM

தங்கவயல் : தங்கவயலில் மகளிர் மன்றம் ஏற்படுத்தி, 40 ஆண்டுகள் நிறைவையொட்டி விழா கொண்டாடப்பட்டது.
மகளிருக்கான முதல் அமைப்பாக தங்கவயல் மகளிர் மன்றத்தை அந்தோணிசாமி என்பவர், 1985ம் ஆண்டு ஏற்படுத்தினார். இந்த அமைப்பில் தங்கவயல் முழுதும் உள்ள பல பெண்கள் ஆர்வமுடன் சேர்ந்தனர். மகளிர் கல்வி, சமூக பொருளாதார, உரிமைக்காக, விழிப்புணர்வு பிரசாரங்களை செய்தனர்.
சிறுதொழில் வளர்ச்சிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினர். சுயதொழிலில் ஈடுபட ஆர்வம் காட்ட செய்தனர். சமுதாய நலனுக்காக பல இடங்களில் பொதுக் கழிப்பறைகள், ஆழ்துளை கிணறுகளை அமைத்துக் கொடுத்து உதவினர். தொடர்ந்து பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர்.
இந்த அமைப்பின் இயக்குநர் எம்.ஆலீஸ் அருணா தலைமையில், இந்த அமைப்பு தொண்டு நிறுவனமாக தற்போது இயங்கி வருகிறது.
இதன் 40ம் ஆண்டு விழா தங்கவயல் உரிகம் பேட்டையில் உள்ள இதன் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதன் நிறுவனர் அந்தோணிசாமியின் நினைவை புகழ்ந்தனர்.