தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தங்கவயல் திருவள்ளுவர் சிலை இன்று 40ம் ஆண்டு விழா

 தங்கவயல் திருவள்ளுவர் சிலை இன்று 40ம் ஆண்டு விழா

 தங்கவயல் திருவள்ளுவர் சிலை இன்று 40ம் ஆண்டு விழா


ADDED : ஜூன் 26, 2026 01:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 01:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: தங்கவயல் தமிழ் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவி, 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இன்று ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.

கர்நாடகாவில் திருவள்ளுவருக்கு முதல் சிலை, 1986 ஜூன் 26ல் தங்கவயல் தமிழ்ச் சங்கத்தில் நிறுவப்பட்டது. இந்த தினத்தை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

இதுவரை, தங்கவயல் தமிழ்ச் சங்கத்தில் 350 தமிழார்வலர்களுக்கு 'தமிழ்மாமணி' விருது வழங்கப்பட்டுள்ளது. பல தமிழ் எழுத்தாளர்களின் நுால்களை வெளியிடப்பட்டு கவுரவித்துள்ளனர்.

இன்று காலை 10:00 மணிக்கு தமிழ் சங்கத் தலைவர் சு.கலையரசன் தலைமையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல், திருக்குறள் ஓதுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து, 30 ஆண்டுகளாக தமிழுக்கு சேவை செய்து வரும் திருமுருகனுக்கு பாராட்டு விழா நடக்கிறது.

திருவள்ளுவர் சிலைக்கு வி.கதிர் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்குகிறார்.

வழக்கறிஞர்கள் சங்க பொதுச் செயலர் ஆர்.ஜோதிபாசு, பேராசிரியர்கள் கிருஷ்ணகுமார், எழுத்தாளர் பரிமளசேகர், தமிழாய்வாளர் வ.பெ.கணேசன், அனந்தகிருஷ்ணன், ஆர்.பிரபுராம், தமிழர் கலை பண்பாட்டு பாசறை தலைவர் வெற்றிசீலன், பிரதாப் குமார் ஆகியோர் தமிழின் பெருமை குறித்து பேசினர்.

விழா ஏற்பாடுகளை, செயல் தலைவர் கமல் முனிசாமி, 'தீபம்' சுப்பிரமணியம், கருணாகரன் உட்பட தமிழ் சங்க நிர்வாகிகள் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us