ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தடை செய்ய முடியாது அமைச்சர் பிரியங்க் கார்கே விளக்கம்
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தடை செய்ய முடியாது அமைச்சர் பிரியங்க் கார்கே விளக்கம்
ADDED : ஆக 15, 2026 11:34 PM

கலபுரகி: ''அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாததால், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தடை செய்ய முடியாது,'' என, மாநில உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
சுதந்திர போராட்டத்தில் உயிரிழந்த, 500 காங்கிரஸ் உறுப்பினர்களின் பெயரை நான் கூறுகிறேன். அதுபோல, சுதந்திர போராட்டத்தில் உயிரிழந்த ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினர்களின் பெயரை, பா.ஜ.,வால் கூற முடியுமா. ஆர்.எஸ்.எஸ்., சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை.
பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு மதக்கலவரங்கள் ஏற்பட்டதில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு பங்கு உண்டு. அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாததால், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தடை செய்ய முடியாது.
ஆர்.எஸ்.எஸ்., சிறந்தது என்றால், பா.ஜ., தலைவர்கள் தங்கள் பிள்ளைகளை ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் முழுநேர உறுப்பினராக சேர்க்கலாமே.
எம்.எல்.சி., தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த 11 பேர் காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். அவர்கள் யார் என முதலில் கண்டுபிடியுங்கள். உங்களால் முடியவில்லை என்றால் என்னிடம் கூறுங்கள். நான் கண்டுபிடித்து தருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
