/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
415வது ஆண்டு தசரா இன்று துவக்கம் மைசூரு நகரமே விழா கோலம் பூண்டது
/
415வது ஆண்டு தசரா இன்று துவக்கம் மைசூரு நகரமே விழா கோலம் பூண்டது
415வது ஆண்டு தசரா இன்று துவக்கம் மைசூரு நகரமே விழா கோலம் பூண்டது
415வது ஆண்டு தசரா இன்று துவக்கம் மைசூரு நகரமே விழா கோலம் பூண்டது
ADDED : செப் 22, 2025 04:07 AM

மைசூரு, : சாமுண்டீஸ்வரி அம்மன் சிலைக்கு மலர் துாவி பூஜை செய்வதன் மூலம், மைசூரில் 415 வது ஆண்டு தசராவை, எழுத்தாளர் பானு முஷ்டாக் இன்று துவக்கி வைக்கிறார். இன்று முதல் 11 நாட்களும் தசரா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகரமே விழா கோலம் பூண்டது.
உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா, மன்னர் காலத்தில் இருந்தே கொண்டாடப்படுகிறது. கடந்த 1610ம் ஆண்டு முதல் முறை கொண்டாடப்பட்டது. போரில் வெற்றி பெறுவதை கொண்டாடும் வகையில், விஜயதசமி என்ற பெயரில் தசரா கொண்டாடினர். யானைகள், குதிரை படைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்படும்.
அப்போது இருந்து ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியம், கலாசாரம் மாறாமல் இந்த விழா நடக்கிறது. இந்த ஆண்டிற்கான தசரா இன்று துவங்கி அடுத்த மாதம் 2 ம் தேதி வரை 11 நாட்கள் நடக்க உள்ளது. இதுவரை 414 ஆண்டுகள் தசரா கொண்டாடப்பட்ட நிலையில், இன்று துவங்குவது 415 ஆண்டு தசரா.
* விருச்சிக லக்கனம்
சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு, மலர் துாவி பூஜை செய்வதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் தசரா துவங்குகிறது. ஏதாவது ஒரு துறையில் சாதித்தவர்கள் துவக்கி வைக்கின்றனர். இந்த ஆண்டு தசராவை புக்கர் விருது பெற்ற, எழுத்தாளர் பானு முஷ்டாக் துவக்கி வைக்கிறார்.
இன்று காலை, 10:10 மணியில் இருந்து 10:46 மணிக்குள், விருச்சிக லக்கனத்தில், வெள்ளி தேரில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலைக்கு, பானு முஷ்டாக் மலர் துாவி, தசராவை துவக்கி வைக்கிறார். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர் மஹாதேவப்பா, அதிகாரிகள் உடன் இருப்பர். பாரம்பரிய வரலாறு கொண்ட தசராவை ஒட்டி, மைசூரு நகரமே விழா கோலம் பூண்டு உள்ளது.
=========
விஜயநகர பேரரசர்கள்
தசராவை முதன் முதலில் 15 ம் நுாற்றாண்டில் கொண்டாடியவர்கள் விஜயநகர பேரரசர்கள். இவர்கள், சுல்தான்களிடம் தோற்ற பின், தசரா கொண்டாட்டம் தடைப்பட்டது. மைசூரு அரண்மனையின் முதலாவது ராஜா உடையாரால், கடந்த 1610ம் ஆண்டில் இருந்து தசரா மீண்டும் துவங்கியது. மைசூரு சாம்ராஜ்யத்தின் ஸ்ரீரங்கப்பட்டணாவில் துவங்கிய தசரா, ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
========
அம்மன் சிலை வந்தது எப்படி?
தசராவின் முக்கிய நிகழ்வே ஜம்பு சவாரி ஊர்வலம் தான். சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட, தங்க அம்பாரியை யானை சுமந்து வரும். ஆனால் முதலில் தங்க அம்பாரியில், மன்னர்களை தான் ஊர்வலமாக அழைத்து செல்வர். கடைசி மன்னராக இருந்த ஜெயசாமராஜ உடையார் இறந்த பிறகு, தங்க அம்பாரியில் யாரை அமர வைப்பது என்று குழப்பம் ஏற்பட்டது.
கடந்த 1980 காலகட்டத்தில் முதல்வராக இருந்த தேவராஜ் அர்ஸ் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது. ஜனாதிபதி, பிரதமர் என பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையை வைக்க முடிவு செய்யப்பட்டது.
===========
எந்தெந்த யானைகள்?
கடந்த 1980ல் இருந்தே சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையை, யானைகள் சுமந்து செல்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு யானை, அம்பாரியை சுமந்ததால் அந்த யானைகள் பற்றிய சரியான தகவல் இல்லை. ஆனால் கடந்த 1999 முதல் 2011 வரை 13 ஆண்டுகள் பலராமா; 2012 முதல் 2019 வரை அர்ஜுனா யானையும் அம்பாரியை சுமந்தன. 2020ல் இருந்து அபிமன்யு யானை அம்பாரியை சுமக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது.
=======
வர்ணம் பூசும் நாகலிங்கப்பா
ஜம்பு சவாரி ஊர்வலத்தின் போது அபிமன்யு உட்பட 14 யானைகள் மீதும், பூசப்பட்டு இருக்கும் வர்ணம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். இதன் பின்னணியில் இருப்பவர் நாகலிங்கப்பா பதிகேரா. அரசு பள்ளி ஓவிய ஆசிரியரான இவர், கடந்த 2004 ம் ஆண்டில் இருந்து, தசரா யானைகளுக்கு வர்ணம் பூசுகிறார். வர்ணம் பூசும் போது யானைகள் தன்னை வாலால் அடித்து உள்ளது என்று கூறும் நாகலிங்கப்பா, அம்பாரி சுமக்கும் அபிமன்யு, குழந்தை போன்று சாதுவாக நடந்து கொள்ளும் என்றும் நெகிழ்ச்சியாக கூறி உள்ளார்.
========
சிம்மாசனம் மீது அமர்ந்து தர்பார்
தசராவை ஒட்டி தங்கம், வைரம், வெள்ளி, நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் மீது அமர்ந்து, மன்னர் குடும்பத்தினர் தர்பார் நடத்துவது பல ஆண்டு காலமாக நடைமுறையில் உள்ளது. மாண்டியா பகுதியை ஹைதர் அலி ஆட்சி செய்த போது, ஸ்ரீரங்கப்பட்டணாவுக்கு சிம்மாசனம் கொண்டு வரப்பட்டது. அவரது ஆட்சி காலத்திற்கு பின், சிம்மாசனம் மீண்டும் மைசூருக்கே கொண்டு வரப்பட்டது. தற்போதும் தசராவை ஒட்டி, மன்னர் குடும்பத்தின் யதுவீர், சிம்மாசனம் மீது அமர்ந்து தர்பார் நடத்துகிறார்.
========
வண்ண விளக்கு அலங்காரம்
தசராவை ஒட்டி மைசூரு நகரில் உள்ள முக்கிய சாலைகள், சதுக்கங்கள், மன்னர் சிலைகள், பழங்கால கட்டடங்கள், அரண்மனை மீது, வண்ண விளக்குகள் பொருத்தியுள்ளனர். இரவில் வண்ண விளக்குகள் ஒளிர விடப்படுகின்றன. இதனால் நகரமே ஜொலிக்கிறது. தசராவுக்காக மைசூரு வந்து இருப்போர், வண்ண விளக்கு அலங்காரத்தை கண்டு ரசிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜம்பு சவாரி முடிந்த மறுநாளே மின்விளக்குகள் அகற்றப்படும். ஆனால் இம்முறை தசரா முடிந்த பின், கூடுதலாக 15 நாட்கள் இருக்கும் என்று, தசரா கமிட்டி அறிவித்து உள்ளது.
=========
வியாபாரம் படுஜோர்
தசரா வந்து விட்டாலே, மைசூரு நகர வியாபாரிகளுக்கு குஷி தான். வழக்கத்தை விட கூடுதல் வியாபாரம் நடக்கும். மைசூரு நகரில் உள்ள முக்கிய மார்க்கெட்டுகளில் காய்கறி, பழம் விற்பனை படுஜோராக நடக்கிறது. இதுதவிர நிலக்கடலை, வெள்ளரிக்காய், தர்பூசணி விற்பனை அதிகமாகி உள்ளது. குழந்தைகளை கவரும் வகையில், சாலைகளில் விளையாட்டு பொருட்கள் விற்பனை கடை அமைக்கப்பட்டு உள்ளது. நடைபாதைகள், சாலையோரங்களில் வீட்டிற்கு தேவையான சிறு பொருட்கள் விற்பனை நடக்கிறது.
========
மைசூரு சில்க் சாரி
பெண்களுக்கு புடவை என்றால் அலாதி பிரியம். அதிலும் மைசூரு சில்க் சாரி என்றால் சொல்லவா வேண்டும். பெண்களை கவர்ந்து இழுக்கும் வகையில், மைசூரு நகரில் உள்ள ஜவுளி கடைகளில், பல டிசைன்களில் மைசூரு சில்க் சாரி விற்பனைக்கு வந்து உள்ளன. இதுபோல ஹேண்ட் பேக், ஹீல்ஸ் என பெண்களுக்கான பொருட்கள் விற்பனைக்காக குவிந்து உள்ளன.
=======
மைசூரு பாக்
மைசூரு இனிப்பு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மைசூரு பாக் தான். சாதாரண நாட்களில் மைசூரு வருவோரே அதிகமாக, மைசூரு பாக் வாங்கி செல்வர். இப்போது பண்டிகை காலம் வேறு, கேட்கவா வேண்டும். மைசூரு பாக் விற்பனை அமோகமாக இருக்கும் என்பதால், ஸ்வீட்ஸ் கடைகளில் வழக்கத்தை விட கூடுதலாக, மைசூரு பாக் தயாரிக்க உள்ளனர்.
பண்டிகையை ஒட்டி ஆர்டர்களும் குவிந்து வருகின்றன. இதுபோல மைசூரு சாண்டல் சோப், மைசூரு சைக்கிள் அகர்பத்தியும், மைசூரில் தயாரிக்கப்படுகிறது. தசராவுக்கு வருவோர் வாங்கி செல்வர் என்பதால், கணிசமான லாபம் கிடைக்கும்.
=========
சுற்றுலா தலங்கள் என்னென்ன?
வனவிலங்கு சரணாலயம், அரண்மனை, ரயில்வே மியூசியம் உட்பட மைசூரு நகரில் சுற்றி பார்க்க, நிறைய சுற்றுலுா தலங்கள் உள்ளன. இதுபோல மைசூருக்கு மிக அருகில் உள்ள, மாண்டியா மாவட்டத்தில் கே.ஆர்.எஸ்., அணை, பிருந்தாவன் கார்டன், திப்பு சுல்தான் சமாதி, வரலாற்று சிறப்புமிக்க பழங்கால கட்டடங்கள் நிறைய உள்ளன.
===========
உணவு மேளா
தசரா முடிந்த பின், மூன்று நாட்கள் உணவு மேளா நடக்க உள்ளது. இதில் நுாற்றுக்கணக்கான தின்பண்ட கடைகள், சிற்றுண்டி கடைகள் இடம்பெற உள்ளன. இந்த மேளாவில் கிடைக்கும், மூங்கில் குழாய் பிரியாணிக்கு டிமாண்ட் அதிகம். வனப்பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் இந்த பிரியாணியை தயார் செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டு உணவு மேளாவிலும், மூங்கில் குழாய் பிரியாணிக்கு தான் முதல் இடம்.
======
விமான கண்காட்சி
மைசூரு தசராவுக்கு வரும் சுற்றுலா பயணியரை கவரும் வகையில், விமான கண்காட்சியும் நடத்தப்படுகிறது. வரும் 29ம் தேதி பன்னிமண்டபம் மைதானத்தில் ஒத்திகையும், மறுநாள் கண்காட்சியும் நடத்தப்படுகிறது. இதுபோல அடுத்த மாதம் 1ம் தேதி ட்ரோன் ஷோவுக்கு ஒத்திகையும், 2ம் தேதி கண்காட்சியும் நடக்கிறது.
=========
ஹோட்டல்கள் முன்பதிவு
மைசூரு தசராவில் கர்நாடகாவின் பிற மாவட்டங்கள், வெளிநாடுகளை சேர்ந்தோரும் பங்கேற்பர். இதனால், நகரில் உள்ள அனைத்து ஹோட்டல், லாட்ஜ்கள் அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. தசராவுக்கு வருவோர் குடகு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்வர் என்பதால், அங்குள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், லாட்ஜ்கள் அறையும் இப்போது இருந்தே, முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
***
மைசூரு, செப். 22--
சாமுண்டீஸ்வரி அம்மன் சிலைக்கு மலர் துாவி பூஜை செய்வதன் மூலம், மைசூரில் 415 வது ஆண்டு தசராவை, எழுத்தாளர் பானு முஷ்டாக் இன்று துவக்கி வைக்கிறார். இன்று முதல் 11 நாட்களும் தசரா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகரமே விழா கோலம் பூண்டது .
உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா, மன்னர் காலத்தில் இருந்தே கொண்டாடப்படுகிறது. கடந்த 1610ம் ஆண்டு முதல் முறை கொண்டாடப்பட்டது. போரில் வெற்றி பெறுவதை கொண்டாடும் வகையில், விஜயதசமி என்ற பெயரில் தசரா கொண்டாடினர். யானைகள், குதிரை படைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்படும்.
அப்போது இருந்து ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியம், கலாசாரம் மாறாமல் இந்த விழா நடக்கிறது. இந்த ஆண்டிற்கான தசரா இன்று துவங்கி அடுத்த மாதம் 2ம் தேதி வரை 11 நாட்கள் நடக்க உள்ளது.
இதுவரை 414 ஆண்டுகள் தசரா கொண்டாடப்பட்ட நிலையில், இன்று துவங்குவது 415 ஆண்டு தசரா.
விருச்சிக லக்கனம் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு, மலர் துாவி பூஜை செய்வதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் தசரா துவங்குகிறது.
ஏதாவது ஒரு துறையில் சாதித்தவர்கள் துவக்கி வைக்கின்றனர். இந்த ஆண்டு தசராவை புக்கர் விருது பெற்ற, எழுத்தாளர் பானு முஷ்டாக் துவக்கி வைக்கிறார்.
இன்று காலை, 10:10 மணியில் இருந்து 10:46 மணிக்குள், விருச்சிக லக்கனத்தில், வெள்ளி தேரில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலைக்கு, பானு முஷ்டாக் மலர் துாவி, தசராவை துவக்கி வைக்கிறார்.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர் மஹாதேவப்பா, அதிகாரிகள் உடன் இருப்பர். பாரம்பரிய வரலாறு கொண்ட தசராவை ஒட்டி, மைசூரு நகரமே விழா கோலம் பூண்டு உள்ளது.
மைசூரு சில்க் சாரி பெண்களுக்கு புடவை என்றால் அலாதி பிரியம். அதிலும் மைசூரு சில்க் சாரி என்றால் சொல்லவா வேண்டும்.
பெண்களை கவர்ந்து இழுக்கும் வகையில், மைசூரு நகரில் உள்ள ஜவுளி கடைகளில், பல டிசைன்களில் மைசூரு சில்க் சாரி விற்பனைக்கு வந்து உள்ளன. இதுபோல ஹேண்ட் பேக், ஹீல்ஸ் என பெண்களுக்கான பொருட்கள் விற்பனைக்காக குவிந்து உள்ளன.
மைசூரு பாகு மைசூரு இனிப்பு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மைசூரு பாகு தான். சாதாரண நாட்களில் மைசூரு வருவோரே அதிகமாக, மைசூரு பாகு வாங்கி செல்வர்.
இப்போது பண்டிகை காலம் வேறு, கேட்கவா வேண்டும். மைசூரு பாக் விற்பனை அமோகமாக இருக்கும் என்பதால், ஸ்வீட்ஸ் கடைகளில் வழக்கத்தை விட கூடுதலாக, மைசூரு பாக் தயாரிக்க உள்ளனர்.
பண்டிகையை ஒட்டி ஆர்டர்களும் குவிந்து வருகின்றன. இதுபோல மைசூரு சாண்டல் சோப், மைசூரு சைக்கிள் அகர்பத்தியும், மைசூரில் தயாரிக்கப்படுகிறது. தசராவுக்கு வருவோர் வாங்கி செல்வர் என்பதால், கணிசமான லாபம் கிடைக்கும்.
உணவு மேளா தசரா முடிந்த பின், மூன்று நாட்கள் உணவு மேளா நடக்க உள்ளது. இதில் நுாற்றுக்கணக்கான தின்பண்ட கடைகள், சிற்றுண்டி கடைகள் இடம்பெற உள்ளன.
இந்த மேளாவில் கிடைக்கும், மூங்கில் குழாய் பிரியாணிக்கு டிமாண்ட் அதிகம். வனப்பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் இந்த பிரியாணியை தயார் செய்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டு உணவு மேளாவிலும், மூங்கில் குழாய் பிரியாணிக்கு தான் முதல் இடம்.