ADDED : ஆக 16, 2026 11:03 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின், கர்நாடக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.
கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர், பெங்களூரு விதான் சவுதாவில், கடந்த 13ம் தேதி துவங்கியது. மரணம் அடைந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. மறுநாள் புதிய சபாநாயகர் தேர்வுக்கு பின், சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
சுதந்திர தினம், ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின், சட்டசபை இன்று காலை 11:00 மணிக்கு மீண்டும் கூடுகிறது.
வறட்சி பிரச்னை, பிடதி டவுன்ஷிப், வந்தே மாதரத்தை சோனியா அவமதிப்பு செய்தது உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை முன்வைத்து, விவாதம் செய்ய எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளனர்.
