/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'போவி ' குடும்பம் ஒதுக்கி வைக்கப்படவில்லை! கிராம பஞ்., துணைத்தலைவர் பறை அடிப்பு
/
'போவி ' குடும்பம் ஒதுக்கி வைக்கப்படவில்லை! கிராம பஞ்., துணைத்தலைவர் பறை அடிப்பு
'போவி ' குடும்பம் ஒதுக்கி வைக்கப்படவில்லை! கிராம பஞ்., துணைத்தலைவர் பறை அடிப்பு
'போவி ' குடும்பம் ஒதுக்கி வைக்கப்படவில்லை! கிராம பஞ்., துணைத்தலைவர் பறை அடிப்பு
ADDED : ஏப் 19, 2025 11:11 PM

மைசூரு: 'போவி சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படவில்லை' என, கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் பறை அடித்து அறிவித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டேயின் அன்னுார் கிராமத்தை சேர்ந்தவர் மீனாட்சி மஹாதேவா. தங்கள் குடும்பத்தை, ஊர் மக்கள் ஒதுக்கி வைத்துள்ளதாக, மூன்று மாதங்களுக்கு முன்பு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'நீதிமன்றத்தில் ஆஜராக, கிராமத்தினருக்கு நோட்டீஸ்' அனுப்பியது. விசாரணைக்கு ஆஜரான கிராமத்தினர், 'நாங்கள் யாரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கவில்லை' என்று தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிமன்றம், 'மீனாட்சி மஹாதேவா குடும்பத்தினர், கிராமத்தில் ஒதுக்கி வைக்கப்படவில்லை என்று தண்டோரா மூலம் அறிவிக்க வேண்டும். இதை சாட்சியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்' என்றது.
இதன் அடிப்படையில், சில நாட்களுக்கு முன்பு, கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் எடதோர் மகேஷ், பறை அடித்தபடி, கிராமத்தில் உள்ள தெருக்களில் வந்து, மீனாட்சி மஹாதேவா குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படவில்லை என்று அறிவித்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இது குறித்து எடதோர் மகேஷ் கூறுகையில், ''இக்கிராமத்தில் மொத்தம் 45 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், 41 குடும்பத்தினர் போவி சமுகத்தை சேர்ந்தவர்கள். மூவர் குருபர் சமூகத்தை சேர்ந்தவர்கள், ஒருவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர்.
''இங்கு அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருக்கும்போது, போவி சமுதாயத்தை சேர்ந்த மீனாட்சி மஹாதேவாவை மட்டும் எப்படி ஒதுக்கி வைக்க முடியும்? அவரின் உள்நோக்கம் என்ன என்பது எங்களுக்கு தெரியவில்லை,'' என்றார்.

