ADDED : ஜூன் 10, 2026 03:49 AM

தூய அந்தோணியார் 141 ம் ஆண்டு விழா
தங்கவயல், ஜூன் 10-
தங்கவயல் மாரிகுப்பம் ஆர்.டி.பிளாக் வட்டத்தில் அமைந்துள்ள தூய அந்தோணியார் தேவாலய 141 ம் ஆண்டு தேர் திருவிழா நேற்று நடந்தது.
தங்கவயலில் ஆங்கிலேயர்கள் வழிபாட்டுக்காக 1885 ல்
மாரிகுப்பம் ஆர்.டி., பிளாக் வட்டத்தில் கட்டப்பட்டது தூய அந்தோணியார் சிற்றாலயம்.
ஆங்கிலேயர் நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் தங்கவயலின் மாரிகுப்பத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இந்த தேவாலயத்தில் தொடர்ந்து ஆண்டு தோறும் தேர் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.
நேற்று 141 ம் ஆண்டுவிழாவை முன்னிட்டு நேற்று காலை முதலே பிரார்த்தனை நிகழ்ச்சிகளும், சிறப்பு திருப்பலி பூசையும் நடந்தது.
நேற்று மாலை
பேண்ட் வாத்தியம் இசைக்க அதிர்வேட்டுகள், வாணவேடிக்கையுடன் தூய அந்தோணியார் தேர் பவனி நடந்தது. பக்தர்கள் மெழுகு வத்திகள் ஏந்தி வழிநெடுகிலும் ஜெபமாலை பிரார்த்தனை மேற்கொண்டனர். இவ்விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தோர் பங்கேற்றனர்.
