/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'கொரோனா தடுப்பூசி மீது குறை கூறிய முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்'
/
'கொரோனா தடுப்பூசி மீது குறை கூறிய முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்'
'கொரோனா தடுப்பூசி மீது குறை கூறிய முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்'
'கொரோனா தடுப்பூசி மீது குறை கூறிய முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்'
ADDED : ஜூலை 07, 2025 03:38 AM

தார்வாட் : ''மாரடைப்புக்கு கோவிட் தடுப்பூசி காரணமல்ல என்று மாநில காங்கிரஸ் அரசு அமைத்த குழு தெரிவித்துள்ளதால், நாட்டு விஞ்ஞானிகளிடம் முதல்வர் சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என மத்திய உணவு பொது வினியோக துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி வலியுறுத்தினார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நாட்டில் முதல் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட போது, பிரதமர் நரேந்திர மோடி அலட்சியப்படுத்தவில்லை. தடுப்பூசி தயாரிக்க தேவையான நிதியை வழங்கினார். வெளிநாட்டு தடுப்பூசிகளை பெறவில்லை. அதே தடுப்பூசியை தான், முதல்வர் சித்தராமையாவும் போட்டு கொண்டார்.
பிரதமர் மோடி, மற்ற நாடுகளை விட, கொரோனாவை சிறப்பாக கையாண்டார். ஆனால் முதல்வர் சித்தராமையாவோ, கொரோனா தடுப்பூசி மூலம் மாரடைப்பு வந்ததா என்பதை கண்டறிய குழு அமைத்தார்.
அவர் அமைத்த குழுவும், 'மாரடைப்புக்கு கோவிட் தடுப்பூசி காரணமல்ல' என்று தெரிவித்துள்ளது. எனவே, நாட்டு விஞ்ஞானிகளிடம் முதல்வர் சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும்.
மருந்து உற்பத்தியில் நாடு முன்னணியில் உள்ளது. நாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகள் வெளிநாட்டினரை சந்தேகப்பட வைக்கும் நோக்கிலும்; நம் மருந்துகள் வெளிநாடுகளில் விற்கப்படுவதை தடுக்கும் வகையில், முதல்வர் சித்தராமையா இத்தகையை அறிக்கையை வெளியிட்டுள்ளாரா.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான அகில இந்திய காங்கிரஸ் தேசிய குழுவில் உறுப்பினராக சித்தராமையா இடம் பெற்றுள்ளார். இதன் மூலம், அவருக்கு இனி மாநில அரசியல் வேண்டாம், தேசிய அரசியலுக்கு வரும்படி, அக்கட்சி நடவடிக்கை உத்தரவிட்டு உள்ளது. அவருக்கு கடவுள் ஆசி வழங்கட்டும்.
அடுத்த முதல்வராக பதவியேற்பேன் என்று கட்சிக்குள், சிவகுமார் கூறி வருகிறார். சித்தராமையாவோ, தன் பதவி காலத்தை முழுமையாக முடிப்பேன் என்று கூறி வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் எந்த மாநிலத்திலும், முதல்வர்கள் இவ்வாறு சொன்னதில்லை. இங்கு பிரச்னை ஏற்பட்டதால், இவ்வாறு கூறி வருகின்றனர்.
பா.ஜ.,வில் மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டு, மாநில தலைவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதில் எந்த குழப்பமும் இல்லை. பா.ஜ., தேசிய தலைவராக, ஒரு பெண் நியமிக்கப்படுவாரா இல்லையா என்பற்கு கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதிலளிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.