தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்., கிழக்கு ஸ்டேஷனில் பணிகள் முடிந்ததால் பலதரப்பினருக்கும்  நன்மை!  

பெங்., கிழக்கு ஸ்டேஷனில் பணிகள் முடிந்ததால் பலதரப்பினருக்கும்  நன்மை!  

பெங்., கிழக்கு ஸ்டேஷனில் பணிகள் முடிந்ததால் பலதரப்பினருக்கும்  நன்மை!  


ADDED : மே 23, 2026 04:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 04:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, மதுரை, துாத்துக்குடி, வேலுார், திருச்சி, கடலுார், ஜோலார்பேட்டை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களை சேர்ந்தவர்கள், பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கின்றனர்.

தங்கள் ஊருக்கு சென்று விட்டு, ரயிலில் திரும்பி வரும் போது, பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து வீடுகளுக்கு சென்றனர். இந்நிலையில், பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தின் தரத்தை மேம்படுத்துதல்; நடைமேடை பணிகள் போன்றவை காரணமாக, பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில், கடந்த ஆண்டு, மார்ச் 13ம் தேதியில் இருந்து ரயில்கள் நின்று செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

பயணியர் சிரமம் இதனால், 15 எக்ஸ்பிரஸ், 26 மெமு ரெயில்கள் இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பயணியரும், இதனால் பெரும் சிரமம் அடைந்தனர். தங்கள் ஊர்களுக்கு செல்ல கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். இது, அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. எப்போது பணிகள் முடிந்து, ரயில்கள் வழக்கம்போல அந்த ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில், தென் மேற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதாவது, நடைமேடை பணிகள் நிறைவு பெற்று உள்ளதால், வரும், 25ம் தேதி முதல், பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில், ரயில்கள் நின்று செல்லும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

'பெங்களூரில் இருந்து

புறப்படும்போது

நிறுத்தப்படாது'

பெங்களூரில் நகரில் உள்ள ரயில் நிலையங்களில், பெங்களூரு கிழக்கு மிகவும் பழமையானது. கடந்த, 1906ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. பாரம்பரியமான இந்த ரயில் நிலையத்தை, 'அம்ருத் பாரத்' ரயில் நிலைய திட்டத்தின் கீழ் பராமரிக்கவும், மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் ரயில்வே அமைச்சகம் நிதி ஒதுக்கியது. கடந்த ஆண்டு பணிகள் துவங்கப்பட்டன.

தற்போது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட, டிக்கெட் கவுன்டரை இடித்து விட்டு அதற்கு பதிலாக, 2 மாடி கட்டடம் கட்டி உள்ளனர். தரைத்தளத்தில் ஆறு டிக்கெட் கவுன்டர்கள் உள்ளன. முதலில் ஒன்று தான் இருந்தது.

முதல், இரண்டாவது மாடியில் ரயில் வருகை, புறப்பாட்டை கண்காணிக்கும் மையம், அதிகாரிகள் ஓய்வு அறை அமைக்கப்பட்டு உள்ளன. முதலில் இரண்டு தண்டவாளங்கள் மட்டுமே இருந்தன. தற்போது கூடுதலாக இரண்டு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த ரயில் நிலையத்தில், நிறுத்தம் இல்லாத ரயில்கள், கடந்து செல்ல இந்த தண்டவாளங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. முதல் நடைமேடையில் மேற்கூரை அமைப்பது, தண்ணீர் குழாய் பொருத்தும் பணிகள், 90 சதவீதம் நிறைவு பெற்று உள்ளன. இரண்டாவது நடைமேடையில் இன்னும் பணிகள் நடந்து வருகின்றன.

அந்த நடைமேடையை ஒட்டி இருந்த சுவர் அகற்றப்பட்டு, 12 அடி உயரத்தில் சிமென்ட் சுவர் கட்டப்பட்டு வர்ணம் பூசப்பட்டு உள்ளது.

இரண்டாவது நடைமேடை பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால், பெங்களூரில் இருந்து செல்லும் போது, ரயில்கள் நிறுத்தப்படாது என்று, தென்மேற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி பிரானேஷ் கூறி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us