/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பயணி கன்னத்தில் நடத்துநர் 'பளார்'
/
பயணி கன்னத்தில் நடத்துநர் 'பளார்'
ADDED : ஆக 31, 2025 11:25 PM
தேவனஹள்ளி: பஸ்சில் டிக்கெட் வாங்கவில்லை என்ற காரணத்தால், பயணியின் கன்னத்தில் பி.எம்.டி.சி., நடத்துநர் ஓங்கி அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளியில் இருந்து பி.எம்.டி.சி., பஸ், நேற்று காலை மெஜஸ்டிக்குக்கு புறப்பட்டது. இதில் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர் பயணித்தார். வழியில் பரிசோதனை அதிகாரிகள், பஸ்சில் ஏறி சோதனை நடத்தினர். அப்போது, இளைஞரிடம் டிக்கெட் இல்லாததை பார்த்து, அவருக்கு 450 ரூபாய் அபராதம் விதித்தனர். இவருக்கு டிக்கெட் கொடுக்காத காரணத்தால், நடத்துநருக்கும் அபராதம் விதித்தனர்.
அதிகாரிகள் சென்ற பின், இளைஞரிடம், 'ஏன் டிக்கெட் வாங்கவில்லை' என, கேட்டு நடத்துநர் தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது கன்னத்தில் கை விரல்கள் பதியும்படி, ஓங்கி அறைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. அறை வாங்கிய இளைஞர், இசை கலைஞராவார். பி.எம்.டி.சி., பஸ்சில் தனக்கு நடந்த அவமதிப்பை. 'எக்ஸ்' வலை தளத்தில் விவரித்து, நியாயம் கேட்டுள்ளார்.
பலரும் நடத்துநரின் செயலை கண்டித்துள்ளனர். பயணியை அறைந்தது சரியல்ல. நடத்துநர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.

