/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பள்ளிகளின் நிதி நிர்வகிப்பில் முறைகேடு நடவடிக்கை எடுக்க மாநகராட்சி தயார்
/
பள்ளிகளின் நிதி நிர்வகிப்பில் முறைகேடு நடவடிக்கை எடுக்க மாநகராட்சி தயார்
பள்ளிகளின் நிதி நிர்வகிப்பில் முறைகேடு நடவடிக்கை எடுக்க மாநகராட்சி தயார்
பள்ளிகளின் நிதி நிர்வகிப்பில் முறைகேடு நடவடிக்கை எடுக்க மாநகராட்சி தயார்
ADDED : பிப் 08, 2025 09:15 PM
பெங்களூரு: பொருளாதார கட்டுப்பாட்டை மீறி, மனம் போனபடி வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுத்து செலவிட்ட, பெங்களூரு மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறியதாவது:
ஆண்டுதோறும் மாநகராட்சி பட்ஜெட்டில், பள்ளி, கல்லுாரிகளின் ஆண்டு விழா, தேர்வுக் கட்டணம், கல்வி சுற்றுலா, சிறு, சிறு பழுது பணிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும். இந்த நிதி அந்தந்த பள்ளி, கல்லுாரிகளின் தலைமை ஆசிரியர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இந்த தொகையை விதிகளின்படி செலவிட வேண்டும். ஆனால் பெங்களூரு மாநகராட்சியின் 34 உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், 16 தொடக்க பள்ளித் தலைமை ஆசிரியர்கள்.
17 பி.யூ., கல்லுாரிகளின் முதல்வர்கள், இரண்டு பட்டப்படிப்பு கல்லுாரிகளின் முதல்வர்கள், பொருளாதார வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது தெரிய வந்துள்ளது.
வங்கியில் இருந்து, மனம் போனபடி பணத்தை எடுத்து இவர்கள் செலவிட்டுள்ளனர். வங்கி பாஸ் புத்தகங்களை ஆய்வு செய்தபோது, லட்சக்கணக்கான ரூபாய் எடுத்திருப்பது தெரிந்தது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
சிறிய அளவில் தவறு செய்தவர்களை எச்சரித்துள்ளோம். பெரிய அளவில் தவறு செய்த 12 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

