/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வரங்களை அள்ளித்தரும் சோழர்கள் கட்டிய எளந்துார் கவுரீஸ்வரர்
/
வரங்களை அள்ளித்தரும் சோழர்கள் கட்டிய எளந்துார் கவுரீஸ்வரர்
வரங்களை அள்ளித்தரும் சோழர்கள் கட்டிய எளந்துார் கவுரீஸ்வரர்
வரங்களை அள்ளித்தரும் சோழர்கள் கட்டிய எளந்துார் கவுரீஸ்வரர்
ADDED : ஜூலை 01, 2025 03:33 AM

சாம்ராஜ்நகர் மாவட்டம் புராதன நிறைந்த மாவட்டமாகும். பக்தர்களை பக்தி பரவசப்படுத்தும் கோவில்களில், கவுரீஸ்வரர் கோவிலும் ஒன்றாகும்.
சாம்ராஜ்நகர் மாவட்டம், எளந்துார் தாலுகாவில் கவுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். தன்னுடயதேயான சிறப்புகள் கொண்டுள்ளன. கருங்கற்களால் கட்டப்பட்டவை. 1500ம் ஆண்டில் சோழர்கள் ஆட்சி காலத்தில் கட்டியதாக, வரலாற்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மிகவும் கலை நயத்துடன் காணப்படுகிறது. அமைதியான, இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளதால், பக்தர்களை வெகுவாக ஈர்க்கிறது.
மூலஸ்தானம்
இந்த காலத்து பொறியாளர்களுக்கு சவால் விடும் வகையில், வலுவாக உள்ளது. கோவிலின் மூலஸ்தானம் கீழ்ப்பகுதியிலும், வெளி வளாகம் உயரமான பகுதியிலும் உள்ளது. கோவிலில் விநாயகர், கால பைரவேஸ்வரர், வீர பத்ரேஸ்வரர், நாராயணர், சண்முகர், துர்கா உட்பட பல்வேறு கடவுள் விக்ரகங்களை தரிசிக்கலாம்.
கோவில் துாண்களில், சிற்பக்கலை வடித்துள்ளனர். கோவில் வரலாற்றை கூறும் கல்வெட்டையும் காணலாம். கல்வெட்டும் கோவில் வடிவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் உட்புறத்தில், விசாலமான மண்டபம் அமைந்துள்ளது. இங்கு குடி கொண்டுள்ள கவுரீஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.
லிங்க வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். கேட்ட வரங்களை அள்ளித்தருபவர். தீய சக்தியால் பாதிக்கப்பட்டவர்கள், வாழ்க்கையில் கஷ்டத்தை சந்திப்பவர், திருமண தடை உள்ளவர்கள், நிம்மதி இல்லாமல் அவதிப்படுவோர் இங்குள்ள ஈசனை வழிபட்டால், அனைத்து கஷ்டங்கள் நீங்கி வாழ்க்கை வளம் பெறும் என்பது ஐதீகம்.
பக்தர்கள் அதிகம்
இதனால், வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் கவுரீஸ்வரரை தரிசிக்க, பக்தர்கள் வருகின்றனர். திங்கட் கிழமைகள், விடுமுறை நாட்கள், பிரதோஷ நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை, மேலும் அதிகம் இருக்கும்.
ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழா, மிகவும் சிறப்பானதாகும். இதில் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்தும், பக்தர்கள் பங்கேற்பர்.
- நமது நிருபர் -