தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கணவர் ரகசிய திருமணம் தடுத்து நிறுத்திய முதல் மனைவி

 கணவர் ரகசிய திருமணம் தடுத்து நிறுத்திய முதல் மனைவி

 கணவர் ரகசிய திருமணம் தடுத்து நிறுத்திய முதல் மனைவி


ADDED : பிப் 09, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 05:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துமகூரு: தன்னை விவாகரத்து செய்யாமல், ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்த கணவரின் திருமணத்தை, முதல் மனைவி தடுத்து நிறுத்தினார்.

பெங்களூரின் ராஜராஜேஸ்வரி நகரில் வசிப்பவர் லேபாக்ஷி, 30. இவருக்கும், ஹரிபிரசாத், 32, என்பவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது.

இவர்கள் எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்தே, ஒருவரை ஒருவர் காதலித்தனர்.

ஆனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே, குடும்ப பிரச்னையால், தம்பதிக்கிடையே விரிசல் ஏற்பட்டு, தனித்தனியாக பிரிந்து வசிக்கின்றனர்; ஆனால் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. இதற்கிடையே ஹரிபிரசாத், தன் மனைவிக்கு தெரியாமல், மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகாவின், நிட்டூர் கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணை, இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

துமகூரு மாவட்டம், குனிகல் தாலுகாவின் யடெயூரில் உள்ள எஸ்.எல்.என்., திருமண மண்டபத்தில். நேற்று காலை 8:00 மணிக்கு முகூர்த்தம் நடக்கவிருந்தது.

இதையறிந்த லேபாக்ஷி, குனிகல்லுக்கு சென்று, அம்மத்துார் போலீசாரிடம் புகார் அளித்து, அவர்களுடன் திருமண மண்டபத்துக்கு சென்றார்.

தாலி கட்டும் நேரத்தில், திருமணத்தை நிறுத்தினார். மனைவியை பார்த்து ஹரிபிரசாத் அதிர்ச்சியடைந்தார். அவரை கண்டித்த போலீசார், விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் மண்டபத்தில், குழப்பமான சூழ்நிலை உருவானது. லேபாக்ஷியின் குடும்பத்தினர், ஹரிபிர சாத்தை கண்டித்துள்ளனர்.

பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலித்து, திருமணம் செய்து கொண்ட மனைவியை விட்டு விட்டு, வேறொரு பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டதை சரியல்ல என, குற்றம் சாட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us