தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விவசாயத்தை வலுப்படுத்த தயார் மத்திய அமைச்சர் சவுஹான் அழைப்பு

 விவசாயத்தை வலுப்படுத்த தயார் மத்திய அமைச்சர் சவுஹான் அழைப்பு

 விவசாயத்தை வலுப்படுத்த தயார் மத்திய அமைச்சர் சவுஹான் அழைப்பு


ADDED : பிப் 09, 2026 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 05:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''கர்நாடகாவில் விவசாயத்தை வலுப்படுத்த, மாநில அரசுடன் இணைந்து செயல்பட தயார்,'' என்று, மத்திய விவசாய துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் கூறி உள்ளார்.

பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடந்த, சர்வதேச விவசாய கண்காட்சியில் அவர் பேசியதாவது:

கர்நாடகாவில் எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும், விவசாயிகள் நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்துகின்றனர். விவசாயிகளுக்கு சேவை செய்வது மத்திய, மாநில அரசுகளின் கூட்டு பொறுப்பு.

மண்வளம் கர்நாடகாவில் விவசாயத்தை வலுப்படுத்தவும், விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கவும் மாநில அரசுடன் இணைந்து செயல்பட மத்திய அரசு தயாராக உள்ளது. மாம்பழம், மிளகாய், பருப்புக்கு ஆதரவு விலை நிர்ணயிக்க கோரி, கர்நாடக விவசாய அமைச்சர் செலுவராயசாமி, மத்திய அரசுக்கு வைத்த கோரிக்கைகளை நாங்கள் ஒரு போதும் நிராகரித்தது இல்லை. அவர் என்ன கேட்டாலும் செய்து கொடுக்க நான் தயாராகவே உள்ளேன். கர்நாடகாவின் மண்வளம் சிறந்தது.

விவசாயத்திற்காக தேவைப்பட்டால் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும். காபி, சந்தனம், தேங்காய், அரிசி உற்பத்தியில் கர்நாடகா சிறந்து விளங்குகிறது. உற்பத்தி மட்டும் போதாது. சந்தை விரிவாக்கமும் தேவை. இதன்மூலம் விவசாயிகள் லாபம் அடைவர்.

சோளம் உற்பத்தியில் கர்நாடகா நாட்டில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் 2.47 ஏக்கர் உற்பத்தி தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது. இதனை அதிகரிக்க வேண்டும். மாநிலத்தில் 35 பருப்பு ஆலைகள் அமைக்கப்படும். இதற்காக மத்திய அரசிடம் இருந்து தலா 25 லட்சம் ரூபாய் நிதி கிடைக்கும். தேசிய வேளாண் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நிலுவையில் உள்ள 154 கோடி ரூபாய் விரைவில் விடுவிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஒருங்கிணைப்பு விவசாய அமைச்சர் செலுவராயசாமி பேசியதாவது:

மத்திய அரசின் விவசாய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில், கர்நாடகா முன்மாதிரி மாநிலமாக உள்ளது. விவசாய துறையில் ஏற்றுமதி, உள்கட்டமைப்பை விரிவுபடுத்த மத்திய அரசின் கூடுதல் ஆதரவு தேவை. விவசாயிகளை தொழில்முனைவோராக மாற்ற, மத்திய, மாநில அரசுகள் இடையில் ஒருங்கிணைப்பு முக்கியம்.

கர்நாடகாவின் 25 விவசாய பொருட்களுக்கு புவியியல் குறியீடு அங்கீகாரம் கிடைத்து உள்ளது. 2022 - 2023 ம் ஆண்டில், கர்நாடகா 36 கோடி ரூபாய் மதிப்பிலான 8,000 டன் தானியங்களை ஏற்றுமதி செய்தது. விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதி திட்டத்தின் கீழ் 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோர் பயிற்சி பெற்று உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us