sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பழைய காதலை கூறியதால் வினை தாலி கட்டாமல் மணமகன் ஓட்டம்

/

பழைய காதலை கூறியதால் வினை தாலி கட்டாமல் மணமகன் ஓட்டம்

பழைய காதலை கூறியதால் வினை தாலி கட்டாமல் மணமகன் ஓட்டம்

பழைய காதலை கூறியதால் வினை தாலி கட்டாமல் மணமகன் ஓட்டம்


ADDED : மே 01, 2025 05:26 AM

Google News

ADDED : மே 01, 2025 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: முகூர்த்த நேரத்தில் தாலி கட்டும் போது, திருமணத்தில் விருப்பம் இல்லை என, கூறி மணமகன் எழுந்து சென்றதால், பரபரப்பான சூழ்நிலை உருவானது.

பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளி தாலுகாவின், பாலேபுரா கிராமத்தில் வசிப்பவர் வேணு, 25. இவருக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது. கிராமத்தின் திருமண மண்டபம் ஒன்றில், நேற்று திருமணம் நடக்கவிருந்தது.

நேற்று முன் தினம் இரவு, வரவேற்பும் அமோகமாக நடந்து முடிந்தது. வேணு மகிழ்ச்சியுடன் தென்பட்டார். சாஸ்திர, சடங்குகளிலும் பங்கேற்றார். தன் வருங்கால மனைவியுடன் சிரித்து, சிரித்து பேசினார். அவரிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை.

நேற்று காலை மணமேடையில், கழுத்தில் மாலையுடன் மணமக்கள் அமர்ந்திருந்தனர். தாலி கட்டும் நேரத்தில், வேணு தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. மணமகள் மீது சந்தேகம் உள்ளது.

நான் தாலி கட்டமாட்டேன் என, கூறி கழுத்தில் இருந்த மாலையை கழற்றி எறிந்துவிட்டு, மண்டபத்தில் இருந்து வெளியேறினார்.

திருமணம் நிச்சயமாவதற்கு முன், வேணுவுடன் பேசிய இளம்பெண், இதற்கு முன் வேறு ஒருவரை காதலித்தது, அந்த காதல் முறிந்தது குறித்தும் கூறியுள்ளார். அப்போது வேணு, 'பழைய காதல் முடிந்த அத்தியாயம்' எனக் கூறி, திருமணத்துக்கு சம்மதித்துள்ளார். அதன்பின் நிச்சயதார்த்தம் நடந்து, மணமேடை வரை வந்தனர். ஆனால் இறுதி விநாடியில் தாலி கட்டும் நேரத்தில், 'இந்த பெண்ணுடன் திருமணம் வேண்டாம்' என, தகராறு செய்துவிட்டு மண்டபத்தில் இருந்தே வெளியேறினார்.

வேணுவின் செயலால், மணமகளின் பெற்றோர் அதிருப்தி அடைந்தனர். இது குறித்து, சென்னராயபட்டணா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தங்கள் மகளுக்கு நியாயம் பெற்றுத்தரும்படி வேண்டுகோள் விடுத்தனர். போலீசாரும் வேணுவிடம் விசாரணை நடத்த உள்ளனர்.






      Dinamalar
      Follow us