தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நோய் தீர்க்கும் மத்துாரம்மா

 நோய் தீர்க்கும் மத்துாரம்மா

 நோய் தீர்க்கும் மத்துாரம்மா


ADDED : பிப் 10, 2026 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 04:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-- நமது நிருபர் -

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து, 6 கி.மீ., துாரத்தில் உள்ளது ஹூஸ்கூர் கிராமம். இங்கு சோழர் காலத்தில் கட்டப்பட்ட, ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான மத்துாரம்மா கோ வில் உள்ளது.

கிராம தே வதையான மத்துாரம்மா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவிலில், ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரலில் கொண்டாடப்படும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

கருவறையில் சிக்கம்மா, தொட்டம்மா என்று இரண்டு அம்மன் சிலைகள் உள்ளன. திருவிழாவின் போது, 120 அடி உயரமுடைய தேர், வீதிகளில் உலா வரும். இந்த தேரின் மீது வாழைப்பழத்தில் நாம் மனதில் நினைப்பதை எழுதி வீசினால் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தொற்றுநோயால் பாதிக்கப்படுவோர், கோவிலில் வந்து அம்மனை தரிசித்து சென்றால், நோய் வேகமாக குணம் அடையும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

இந்த கோவிலுக்கு எலக்ட்ரானிக் சிட்டி, சர்ஜாபூர், ஓசூரில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

கோவில் நடை தினமும், காலை, 5:30 முதல் இரவு, 8:30 மணி வரை திறந்திருக்கும்.

கோவில் முன் வாகனங்களை நிறுத்தும் வசதியும் உள்ளது.

மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து ஹூஸ்கூருக்கு நேரடி பஸ் சேவை உள்ளது. பஸ் நம்பர் 349 சி. ரயிலில் சென்றால் ஓசூர் செல்லும் மெமு ரயிலில் சென்று, ஹீலலிகேவில் இறங்கி அங்கிருந்து செல்லலாம்; மெட்ரோ ரயிலில் சென்றால் ஹெப்பகோடி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us