/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வழக்கை ரத்து செய்ய கோரி ஆர்.சி.பி., மனு விசாரணையை இன்று ஒத்திவைத்தது ஐகோர்ட்

ADDED : ஜூன் 10, 2025 02:25 AM
பெங்களூரு:' கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தது தொடர்பாக தங்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி, ஆர்.சி.பி., நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீது இன்றும் விசாரணை நடைபெறுகிறது.
பெங்களூரு சின்னசாமி மைதானம் முன் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ஆர்.சி.பி., ரசிகர்கள் 11 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் ஆர்.சி.பி., நிர்வாகம், டி.என்.ஏ., தனியார் நிறுவனம், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் ஆகிய அமைப்புகள் மீது மூன்று தனி தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் தங்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி ஆர்.சி.பி., தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் மேனன், விளம்பர பிரிவு தலைவர் நிகில், டி.என்.ஏ., நிறுவனத்தின் அதிகாரி சுனில் மேத்யூ, கிரண், சமந்த் ஆகியோர் நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். பொறுப்பு தலைமை நீதிபதி காமேஸ்வர் ராவ் விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு வக்கீல், 'இந்த வழக்கில் தங்கள் மனுதாரர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. முதல்வரின் அழுத்தத்தால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள், மனு தொடர்பாக ஆட்சேபனை தாக்கல் செய்வதற்கு அவகாசம் கேட்டதால், விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.