தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ திருவாசகம் அருளுரை

திருவாசகம் அருளுரை

திருவாசகம் அருளுரை


ADDED : செப் 01, 2025 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2025 03:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கவயல்:உரிகம் பேட்டை பால சோமேஸ்வரர் கோவிலில் 'திருவாசகம்' அருளுரை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

உரிகம் பேட்டையில் 1,000 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து பால சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தொடர்ந்து சைவ மத வழிபாடுகள் நடந்து வருகிறது.

இக்கோவிலின் பூஜைகளை மஞ்சுநாத தீக் ஷித் செய்து வருகிறார். இக்கோவில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமானது.

இக்கோவிலில், திருக்கயிலாய ஸ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோவில் ஆதீன ஸ்ரீ காரியம் வாமதேவ சிவாக்கர தேசிக சுவாமிகள், 'திருவாசகம்' மற்றும் சிவ பெருமானை போற்றியும் அருளுரை, பக்திசை, பஜனை நடத்தினார்.

தங்கவயலின் சிவபக்தர்கள் பலர் பங்கேற்றனர். மோகன்ராஜ் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us