தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கிரகப்பிரவேசத்துக்கு முன்பே சாயும் வீடு

 கிரகப்பிரவேசத்துக்கு முன்பே சாயும் வீடு

 கிரகப்பிரவேசத்துக்கு முன்பே சாயும் வீடு


ADDED : ஆக 05, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 11:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: புதிதாக கட்டிய வீடு, கிரகப்பிரவேசத்துக்கு முன்பே, சாய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரின் பன்னரகட்டா அருகில், பில்வாரஹள்ளியின், நியூ வின்னர்ஸ் லே - அவுட்டில், மாடி கொண்ட புதிய வீடு கட்டப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் கிரகப்பிரவேசம் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, வீட்டு உரிமையாளர் செய்து வருகிறார்.

இப்பகுதியில் நேற்று முன் தினம் இரவு, கன மழை பெய்ததில், வீட்டை ஒட்டியிருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து புதிய வீடும் சாய்ந்துள்ளது. இந்த கட்டடத்தின் பக்கத்திலேயே தனியார் பள்ளி உள்ளது. பள்ளிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தரமற்ற பணிகள் நடந்ததே இதற்கு காரணம் என, கூறப்படுகிறது.

வீடு இடியும் நிலையில் உள்ளது. தகவல் அறிந்து கிராம பஞ்சாயத்து தலைவர் ரமேஷ், பஞ்சாயத்துராஜ் துறை பொறியாளர் சங்கரப்பா, அங்கு வந்து பார்வையிட்டார். உடனடியாக வீட்டை இடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us