கட்சிக்கு எதிராக பேசவில்லை எம்.எல்.ஏ., திம்மாபூர் விளக்கம்
கட்சிக்கு எதிராக பேசவில்லை எம்.எல்.ஏ., திம்மாபூர் விளக்கம்
ADDED : ஆக 05, 2026 11:14 PM

பெங்களூரு: ''கட்சிக்கு எதிராக நான் பேசவில்லை,'' என்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ., திம்மாபூர் விளக்கம் அளித்துள்ளார்.
காங்கிரஸ் மேலிடம் பணம் இருப்போருக்கு தான் அமைச்சர் பதவி வழங்குகிறது என்று, முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.,வுமான திம்மாபூரும், முன்னாள் எம்.எல்.ஏ., நஞ்சய்யனமாதாவும் பேசியதாக கூறப்படும் ஆடியோவை, மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி நேற்று வெளியிட்டார்.
இதுகுறித்து, திம்மாபூர் கூறியதாவது:
நான் கட்சியின் ஒழுக்கமான சிப்பாய். கட்சிக்கு எதிராக பேசவில்லை. யார் ஆடியோவை வெளியிட்டார்களோ அவர்களிடம் சென்று உண்மையை கேளுங்கள். புதிய முதல்வர் வரும் போது அவர் தனது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது இயல்பு தான்.
இதில் வருத்தப்பட எதுவும் இல்லை. ஆனால் முன்கூட்டியே எங்களிடம் சொல்லி இருக்க வேண்டும். காரணத்தை கூறி இருக்கலாம். நான் கலால் துறை அமைச்சராக இருந்த போது, துறையில் முன்னேற்றம் கொண்டு வந்தேன்.
புதிதாக 20 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. என் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாக சொல்கின்றனர். அரசியலில் சதி திட்டங்கள் சர்வ சாதாரணம்.
பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.,க்கள், ராஜினாமா செய்வதாக கூறுவது சரியல்ல. எல்லாவற்றையும் சரி செய்யும் சக்தி முதல்வர் சிவகுமாருக்கு உள்ளது. அமைச்சரவையில் இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள் நல்ல பணிகள் செய்யட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
