/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மண்ணை விட்டு பறந்தது 'கன்னட பைங்கிளி'
/
மண்ணை விட்டு பறந்தது 'கன்னட பைங்கிளி'
ADDED : ஜூலை 15, 2025 04:40 AM
கன்னடத்து பைங்கிளியான சரோஜா தேவி, 1967ல் ஸ்ரீஹர்ஷாவை திருமணம் செய்து கொண்டார். திரையுலகில் திருமணம் ஆன பின்னர், நடிகைகளுக்கு மவுசு குறைந்துவிடும். ஆனால், 1984 வரை தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார்.
கடந்த 1985ல் அவரது கணவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, 1986ல் மரணமடைந்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீழாத அவர், ஓராண்டாக குடும்பத்தினரை தவிர, வேறு வெளிநபர்களை பார்க்காமல் வீட்டிலேயே இருந்தார்.
கணவர் இறப்புக்கு முன்பு ஒப்புக் கொண்ட படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக, 1987 முதல் 1990 வரை எட்டு படங்களில் நடித்தார். இதில், 1988ல் தாய்மேல் ஆணை, 1989ல் தர்ம தேவன் ஆகிய தமிழ் படங்களும் அடங்கும்.
அதன் பின், திரைப்பட துறையில் இருந்து ஐந்து ஆண்டுகள் விலகி இருந்தார். அவரது ரசிகர்கள், தயாரிப்பாளர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார்.
அதேவேளையில், காதல் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்ற நிபந்தனையுடன், 1993ல் நடிகர் சிவாஜி கணேசனுடன் பாரம்பரியம் என்ற திரைப்படத்தின் மீண்டும் நடிப்பை துவக்கினார்.
அதுபோன்று, 1995ல் கன்னடத்தில் அனுராக சங்கமா, 1997ல் அக்னி ஐ.பி.எஸ். படங்களில் நடித்தார். மீண்டும் 1997ல் சிவாஜி கணேசனுடன் 'ஒன்ஸ்மோர்' படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.