தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/எல்.கே.ஜி., – யு.கே.ஜி., வகுப்பு அரசு பள்ளிகளிலும் வருகிறது

எல்.கே.ஜி., – யு.கே.ஜி., வகுப்பு அரசு பள்ளிகளிலும் வருகிறது

எல்.கே.ஜி., – யு.கே.ஜி., வகுப்பு அரசு பள்ளிகளிலும் வருகிறது


UPDATED : அக் 31, 2026 12:00 AM

ADDED : அக் 30, 2026 06:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 12:00 AM ADDED : அக் 30, 2026 06:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., -– யு.கே.ஜி., வகுப்புகள் துவக்க, கல்வித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநில அரசு பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், தரமான கல்வியை அளிப்பது அரசின் எண்ணமாகும். தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., – யு.கே.ஜி., வகுப்புகள் இருப்பதால், பெற்றோர் பலரும் தனியார் பள்ளிகளில், பிள்ளைகளை சேர்க்கின்றனர்.

எனவே அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி., – யு.கே.ஜி., துவக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

நடப்பு கல்வியாண்டிலேயே, 581 பள்ளிகளில் எல்.கே.ஜி., – யு.கே.ஜி., துவக்க ஒப்புதல் அளித்து, கல்வித்துறை உத்தரவு வெளியிட்டுள்ளது. தினமும் காலை 10:00 மணி முதல், மதியம் 3:30 மணி வரை வகுப்புகள் நடக்கும்.

இந்த வகுப்புகள் தனித்தனி வகுப்பறைகளில் நடத்த வேண்டும். நான்கு முதல் ஐந்து வயது வரையிலான சிறார்களை வகுப்பில் சேர்க்கலாம்.

கர்நாடக பப்ளிக் பள்ளிகள் உட்பட ஒரு வகுப்பில், அதிகபட்சம் 40 சிறார்களுக்கு மட்டுமே அட்மிஷன் வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., – யு.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்படுவது குறித்து, பிரசாரம் செய்ய வேண்டும்.

இங்கு கல்வி பெற வரும் சிறார்களுக்கும் மதிய உணவு, பால், முட்டை வழங்கும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us