/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ரப்பர் ஸ்டாம்ப் தலைவர்' கார்கேயை சீண்டிய சலவாதி
/
'ரப்பர் ஸ்டாம்ப் தலைவர்' கார்கேயை சீண்டிய சலவாதி
ADDED : மே 04, 2025 11:26 PM

பெங்களூரு: ''மல்லிகார்ஜுன கார்கே ரப்பர் ஸ்டாம்ப் தலைவர்,'' என்று, மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி கிண்டல் அடித்து உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அம்பேத்கரை தேர்தலில் தோற்கடித்தது காங்கிரஸ் இல்லை என்று நிரூபிப்பவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் கொடுக்கிறேன். மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன். அம்பேத்கரை காங்கிரஸ் எப்படி நடத்தியது என்று அனைவருக்கும் தெரியும். அவர் இறந்த போது உடலை புதைக்க இடம் கூட கொடுக்கவில்லை.
மல்லிகார்ஜுன கார்கே ரப்பர் ஸ்டாம்ப் தலைவர் போன்று நடத்தப்படுகிறார். அவர் இன்னும் அடிமைத்தனத்தை கடைப்பிடித்து வருகிறார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அதிக் பதவி காலத்தை நீட்டித்து உள்ளனர். அரசின் அனைத்து துறையிலும் தலையிடுகிறார். அதிக் மீது முதல்வருக்கு அன்பு அதிகம். சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிக்கிற்கு பதவி கொடுக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.