/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.900க்கு 3 சேலை விற்பனை திறந்த அன்றே கடை மூடல்
/
ரூ.900க்கு 3 சேலை விற்பனை திறந்த அன்றே கடை மூடல்
ADDED : ஜூலை 31, 2025 05:59 AM
மாண்டியா : சலுகை விலையில் சேலைகள் வாங்க அதிக அளவில் பெண்கள் திரண்டதால், திறப்பு விழா அன்றே பாதியில் கடையை மூடும் நிலை உருவானது.
மாண்டியா நகரின், வி.வி.சாலையில் புதிதாக துணிக்கடை ஒன்று, நேற்று திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக, 900 ரூபாய்க்கு மூன்று சேலைகள் வழங்கப்படும் என, உரிமையாளர் அறிவித்திருந்தார். இதனால் கூட்டம், கூட்டமாக பெண்கள் குவிந்தனர். எதிர்பார்த்ததை விட, அதிகமான பெண்கள் வந்ததால், சேலைகள் சிறிது நேரத்தில் விற்று தீர்ந்தன.
அனைவருக்கும் 900 ரூபாய்க்கு மூன்று சேலைகள் வழங்க முடியாமல், கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் சோர்வடைந்தனர். சேலைகள் காலியாகி விட்டன. திரும்பிச் செல்லும்படி கூறியும் பெண்கள் கடையை விட்டு நகரவில்லை, அவர்களை சமாளிக்க முடியவில்லை.
வேறு வழியின்றி கடை உரிமையாளர், போலீசாரை வரவழைத்தார். போலீசாரும் சூழ்நிலையை உணர்த்தி, கடையை மூடினர். 900 ரூபாய்க்கு மூன்று சேலைகள் வாங்கலாம் என, ஆசையோடு வந்த பெண்கள், கடை உரிமையாளரை திட்டியபடி, அங்கிருந்து சென்றனர்.