தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'சபாநாயகரே பசிக்குது... சீக்கிரம் பிரேக் விடுங்கள்!'

 'சபாநாயகரே பசிக்குது... சீக்கிரம் பிரேக் விடுங்கள்!'

 'சபாநாயகரே பசிக்குது... சீக்கிரம் பிரேக் விடுங்கள்!'


ADDED : செப் 24, 2026 12:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 12:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற கன்னட நடிகர் அனந்த் நாக்கை வாழ்த்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனந்த்தை வாழ்த்தி துணை முதல்வர் பரமேஸ்வர், துணை சபாநாயகர் மங்கள் வைத்யா, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் முனிரத்னா, அஸ்வத் நாராயணன் பேசினர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ., யஷ்வந்த்ராய பாட்டீலின் ராஜினாமா கடிதம் குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு, அமைச்சர்கள் பதிலளித்தனர். பரப்பாக விவாதம் நடந்த போது, அமைச்சர் பைரதி சுரேஷ் சட்டசபையில் நுழைந்தார். திடீரென அவர், எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதில் கூறினார். 'சுரேஷ் நீங்கள், இப்போது தான் வந்தீர்கள், உங்களுக்கும் எதுவும் தெரியாது. அமைதியாக இருங்கள்' என எதிர்க்கட்சியினர் கூறினர். 'நான் அனைத்தையும் 'டிவி'யில் பார்த்துவிட்டு தான் வந்தேன்' என்றார். இது, அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

விஜயேந்திரா பேசும் போது, அமைச்சர் பைரதி சுரேஷ் அடிக்கடி குறுக்கிட்டார். ஆத்திரமடைந்த சபாநாயகர் ஜி.எஸ்.பாட்டீல், 'தொடர்ச்சியாக குறுக்கீடு செய்தால், அவர் எப்படி பேச முடியும்' என சுரேஷிடம் கேட்டார்.

அப்போது, காங்கிரஸ் உறுப்பினர்களை பார்த்து 'அவமானம்...அவமானம்' என, பா.ஜ.,வினர் கோஷம் எழுப்பினர்.

'சட்டசபையில் சந்தோஷமாக இருக்கும் ஒருவர், சித்தராமையா தான். முதல்வர் சிவகுமார் அரசின் லட்சணத்தை பார்த்து, அவர் மனதிற்குள் சிரித்து கொண்டிருக்கிறார்' என எதிர்க்கட்சி துணை தலைவர் அரவிந்த் பெல்லத் கூறியது, சலசலப்பை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேசும் போது, அமைச்சர் லட்சுமண சவதி கருத்து கூற முற்பட்டார். அப்போது, அசோக், 'அய்யோ வேண்டாம். உங்களது அறிவுரையே வேண்டாம்' என்றதும், சபையில் சிரிப்பலை எழுந்தது

வழக்கமாக மதியம் 1:30 மணிக்கு உணவு இடைவேளை விடப்படும். நேற்று, மதிய வேளையில் விவாதம் தீவிரமடைந்த்ததால் இடைவேளை விடுவதற்கு தாமதமானது.

அப்போது, எதிர்க்கட்சியினர், 'சபாநாயகரே பசிக்குது... சீக்கிரம் பிரேக் விடுங்கள்' என கூறியது சிரிப்பை ஏ ற்படுத்தியது.

கஸ்துாரிரங்கன் அறிக்கை மீதான விவாதம், மாநில அரசின் மோசமான நிர்வாக திறன், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ராஜினாமா கடிதம் ஆகியவற்றின் மீதான அனைத்து விவாதங்களையும், பின்வரிசையில் அமர்ந்து கொண்டு மவுனமாக முன்னாள் முதல்வர் சித்தராமையா பார்த்து கொண்டிருந்தார்.

அவ்வப்போது, எம்.எல்.ஏ.,க்கள் தேஷ்பாண்டே, பொன்னண்ணா ஆகியோரிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us