தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்


ADDED : செப் 24, 2026 12:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 12:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போதை விற்றவர்கள் கைது

பெங்களூரு, தொம்மலுார் வெளிவட்ட சாலை பகுதியில், தடை செய்யப்பட்ட ஆம்பெடமைன் போதை பொருளை விற்ற, இரண்டு வாலிபர்களை ஜீவன்பீமாநகர் போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 43 லட்சம் ரூபாய் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடை உரிமையாளர் கொலை

பெங்களூரு ஜே.பி.நகர் 7வது பேசில், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை நடத்தியவர் ராஜ்சிங், 55. இவரது கடையில் உறவினர் ஹரிசிங், 48, வேலை செய்தார். சொந்தமாக கடை வைக்க நினைத்த ஹரிசிங், அதற்காக பணம் தரும்படி ராஜ்சிங்கிடம் கேட்டார். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில், நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜ்சிங்கை, கூர்மையான ஆயுதத்தால் தாக்கி, ஹரிசிங் கொலை செய்தார். தலைமறைவாக உள்ள அவரை புட்டேனஹள்ளி போலீசார் தேடுகின்றனர்.

2 சிறுவர்கள் உயிரிழப்பு

ராம்நகர், கனகபுராவின், குனகனஹள்ளி கிராமத்தில் வசிக்கும் சீனிவாஸ், பத்மாவதி தம்பதியின் மகன் மது, 14, நாராயண், மாதுரி தம்பதியின் ஸ்ரீஹரி, 8. இரண்டு சிறுவர்களும், நேற்று முன் தினம் மாலை, வீட்டருகில் உள்ள நீரோடையில் நீந்தி விளையாடும் போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us