தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களுக்கு தடை

 பெங்களூரில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களுக்கு தடை

 பெங்களூரில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களுக்கு தடை


ADDED : செப் 24, 2026 12:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 12:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பை கருதி, நகரில் குறிப்பிட்ட பகுதியில் கனரக வாகனங்கள் இயங்க, போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர்.

பெங்களூரில் கடந்த 18ம் தேதி வர்த்துார் - குன்ஜுர் - ஒயிட்பீல்டு வழித்தடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பள்ளி முடிந்து வீட்டுக்கு மாணவர்களுடன் புறப்பட்ட பள்ளி பஸ்கள், இரண்டு மணி நேரம் சிக்கி தவித்தன. ஏற்கனவே காலை 7:00 முதல் 11:00 மணி வரை மட்டும் கனரக வாகனங்களுக்கு தடை விதித்த போதும், நெரிசலுக்கு தீர்வு காண முடியவில்லை.

இதற்கு தீர்வு காண, போக்குவரத்து போலீசார் முன்வந்துள்ளனர்.

பள்ளி பஸ்கள், தடையின்றி செல்லவும், மூன்று புதிய கால அட்டவணையை அமல்படுத்தி உள்ளனர்.

அதன்படி, வர்த்துார் - குன்ஜுர் - ஒயிட்பீல்டு பகுதியில், காலை 7:00 முதல் 11:00 மணி வரையிலும்; மதியம் 1:00 முதல் 3:00 மணி வரையிலும்; மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரையிலும் கனரக வாகனங்கள், லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கை, பரபரப்பான நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் இருந்து விமோசனம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us