
சிந்தனை களத்தில் 'சொல்ல மறந்த கதை'எனும் தலைப்பில் தாய்மொழி கூட்டமைப்பு நிறுவனரும், திருவள்ளுவர் சங்க தலைவருமான எஸ்.டி.குமார் பேசியதாவது:
தங்கவயலில் நடந்த கொடுமைகள் ஏராளம். தேவாலயங்களில் தமிழில் இறைவழிபாடு நடத்தக்கூடாது என தடுக்கப்பட்டது. இதற்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டன. தேசிய கட்சிகளில் சேர்ந்த தமிழர்களில் எத்தனை பேர் எம்.எல்.ஏ.,க்களாக இருக்கின்றனர். 1991ம் ஆண்டு காவிரி கலவரத்தில் தமிழச்சிகளின் தாலி அறுக்கப்பட்டது. பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். உள்நாட்டிலே தமிழர்கள் அகதிகளாகினர்.
அரசியலில் வீர வசனம் பேசும் தமிழக அரசியல் வாதிகள், யாரும் எங்களை காப்பாற்ற முன்வரவில்லை. இந்த நிலையை தவிர்ப்பதற்காகவே, பெங்களூரிலே கன்னட தமிழர் ஒற்றுமை மாநாடு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். அப்போது தான் நம் எதிர்காலம் சிறக்கும். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் உலகளாவிய திருக்குறள் மாநாடு புனித ஜோசப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்படும்.
கர்நாடகத்தில் நடந்த மொழி போராட்டங்கள் குறித்து புத்தமாகவே எழுதினேன். 1986ல் கர்நாடகாவில் கன்னடம் மொழி பேசுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால், 80 லட்சம் தமிழர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

