/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கம் போன்று ஜொலித்த மாணவியர் தங்கவயலில் இரட்டையர்கள் அபாரம்
/
தங்கம் போன்று ஜொலித்த மாணவியர் தங்கவயலில் இரட்டையர்கள் அபாரம்
தங்கம் போன்று ஜொலித்த மாணவியர் தங்கவயலில் இரட்டையர்கள் அபாரம்
தங்கம் போன்று ஜொலித்த மாணவியர் தங்கவயலில் இரட்டையர்கள் அபாரம்
ADDED : மே 02, 2025 11:29 PM

தங்கவயல்: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தங்கவயலில் ஆண்களை விட பெண்களே அதிகம் பேர் தேர்ச்சிப்பெற்றுள்ளனர். தங்கவயல் மாணவி, மாநிலத்தில் இரண்டாம் ரேங்க் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
தங்கவயலில் உள்ள 55 உயர்நிலைப்பள்ளிகளில் 3,052 பேர் தேர்வு எழுதினர். இதில், 1,658 பேர் தேர்ச்சிப்பெற்றனர். இதில் மானியம் பெறாத பள்ளிகள் 64.50 சதவீதமும், அரசுப்பள்ளிகள் 57.27 சதவீதமும், மானியம் பெறும் பள்ளிகள் 40.35 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளிகள்: இதில் தேர்வு எழுதிய ஆண்கள் 308; பெண்கள் 387 என மொத்தம் 695 பேர். இதில் ஆண்கள் 163; பெண்கள் 235 என 398 பேர் தேர்ச்சி. இது 57.27 சதவீதம்.
மானியம் பெறும் பள்ளிகள்: இதில் தேர்வு எழுதிய ஆண்கள் 475; பெண்கள் 603 என மொத்தம் 1078 பேர். இதில் ஆண்கள் 118; பெண்கள் 317 என 435 பேர் தேர்ச்சி. இது 40.35 சதவீதம்.
மானியம் பெறாத பள்ளிகள்: இதில் தேர்வு எழுதிய ஆண்கள் 723; பெண்கள் 555 பேர் என மொத்தம் 1278 பேர். இதில் ஆண்கள் 407; பெண்கள் 418 என 825 பேர் தேர்ச்சி. இது 64.50 சதவீதம்.
தங்கவயல் தாலுகாவில் உள்ள 65 பள்ளிகளில் ஆண்கள் 1507; பெண்கள் 1545 என 3,052 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் ஆண்கள் 688 பேரும், பெண்கள் 970 பேரும் தேர்ச்சிப்பெற்றனர். இது 54.33 சதவீதம் ஆகும். ஆண்களை விட பெண்களே அதிகம் பேர் தேர்ச்சிப்பெற்றுள்ளனர்.
இரட்டையர்கள்
ராபர்ட்சன்பேட்டையில் உள்ள மஹாவீர் ஜெயின் பள்ளியில் எஸ்.பவனிகா என்ற மாணவி 624 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் இரண்டாம் ரேங்க் பெற்றார். கோலார் மாவட்டத்தில் முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர், தங்கவயல் டாக்டர் செந்தில் குமார் -- சூர்யகலா தம்பதி மகள்.
பவனிகா சகோதரி பவிஷா. இவர்கள் இரட்டையர்கள். இருவரும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதினர். இதில் மூத்தவர் பவிஷா, 609 மதிப்பெண்ணுடன் 'டிஸ்டிங்ஷன்' பெற்றுள்ளார்.
இருவருக்கும் தாயார் சூர்யகலா இனிப்பு ஊட்டினார்; குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.