தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மத்திய ஆப்ரிக்காவில் தவிக்கும் ஹக்கிபிக்கி சமுதாயத்தினர்

 மத்திய ஆப்ரிக்காவில் தவிக்கும் ஹக்கிபிக்கி சமுதாயத்தினர்

 மத்திய ஆப்ரிக்காவில் தவிக்கும் ஹக்கிபிக்கி சமுதாயத்தினர்


ADDED : பிப் 02, 2026 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 05:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: மருத்துவ மூலிகைகள் உட்பட, ஆயுர்வேத மருந்துகளை விற்கும் நோக்கில், மத்திய ஆப்ரிக்காவுக்கு சென்ற கர்நாடகாவின் ஹக்கிபிக்கி சமுதாயத்தின் எட்டு பேரின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டதால், அங்கிருந்து திரும்ப முடியாமல் பரிதவிக்கின்றனர்.

தாவணகெரே மாவட்டத்தின், கோபநாள் கிராமத்தின் இருவர், ஷிவமொக்காவின் ஐந்து பேர், சிக்கமகளூரு மாவட்டத்தின், மல்லேனஹள்ளியின் ஒருவர், மருத்துவ மூலிகைகள், ஆயுர்வேத மருந்துகளை விற்பதற்காக, கடந்தாண்டு மத்திய ஆப்பிரிக்காவுக்கு சென்றனர். விற்பனை முடிந்து சொந்த ஊருக்கு புறப்பட தயாராகி வந்தனர்.

இந்நிலையில், இவர்களின் பாஸ்போர்ட்களை, ஆப்ரிக்க போலீசார் திடீரென பறிமுதல் செய்து கொண்டனர். 1,500 டாலர் கொடுத்தால் மட்டுமே, பாஸ்போர்ட் திரும்ப கிடைக்கும் என, கூறியுள்ளனர். அவ்வளவு பணம் இல்லாததால், ஊருக்கு திரும்ப வழி தெரியாமல் மத்திய ஆப்ரிக்காவில் சிக்கியுள்ளனர்.

நெருக்கடியில் சிக்கியுள்ள தங்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து செல்லும்படி, வீடியோ மூலமாக மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவர்களின் உறவினர்களும் வெளியுறவுத்துறைக்கு வேண்டுகோள் அனுப்பியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us