/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோடைக்கு முன்பே கொளுத்தும் வெயில்
/
கோடைக்கு முன்பே கொளுத்தும் வெயில்
ADDED : பிப் 18, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: பெங்களூரில் கோடை காலத்திற்கு முன்பே வெயில் சுட்டெரிக்கத் துவங்கிவிட்டதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
பெங்களூரில் கோடை காலம் வருவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். வழக்கமாக மார்ச்சில் ஆரம்பமாகும் கோடை வெயில், இம்முறை பிப்ரவரியிலேயே ஆரம்பமாகிவிட்டது.
பெங்களூரில் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விட 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாகும். பெங்களூரு மட்டுமின்றி கலபுரகி, பாகல்கோட், தார்வாட், கதக் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிலும் வழக்கத்தை விட வெயில் அதிகரித்துள்ளது.