/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரஜ்வலுக்கு தண்டனை கிடைக்க உதவிய துருக்கி தொழில்நுட்பம் டி.என்.ஏ., பரிசோதனையிலும் வசமாக சிக்கினார்
/
பிரஜ்வலுக்கு தண்டனை கிடைக்க உதவிய துருக்கி தொழில்நுட்பம் டி.என்.ஏ., பரிசோதனையிலும் வசமாக சிக்கினார்
பிரஜ்வலுக்கு தண்டனை கிடைக்க உதவிய துருக்கி தொழில்நுட்பம் டி.என்.ஏ., பரிசோதனையிலும் வசமாக சிக்கினார்
பிரஜ்வலுக்கு தண்டனை கிடைக்க உதவிய துருக்கி தொழில்நுட்பம் டி.என்.ஏ., பரிசோதனையிலும் வசமாக சிக்கினார்
ADDED : ஆக 04, 2025 05:13 AM

பெங்களூரு: பலாத்கார வழக்கில் முன்னாள் எம்.பி., பிரஜ்வலுக்கு சாகும் வரை தண்டனை வாங்கி கொடுப்பதில், துருக்கி தொழில்நுட்பம் முக்கிய உதவியாக இருந்து உள்ளது.
வீட்டு வேலைக்கார பெண் பலாத்கார வழக்கில், ஹாசன் ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வலுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் அதிரடி தீர்ப்பு கூறியுள்ளார்.
நீதிபதி பாராட்டு இதற்கிடையில் பிரஜ்வல் தொடர்பான 2,000க்கும் மேற்பட்ட, ஆபாச வீடியோக்கள் வெளியான போது, பெரும்பாலான வீடியோக்களில் அவரது முகம் இல்லை. ஒரு சில வீடியோக்களில் முகம் தெரிந்தாலும், தெளிவாக இல்லை. இதனால் வீடியோக்களில் இருப்பது பிரஜ்வல் இல்லை என்று, அவரது தரப்பு வக்கீல்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
ஆனால் அரசு தரப்பு வக்கீல்கள், நீதிமன்றத்தில் கொடுத்த சாட்சிகளின் வீடியோக்களில் இருப்பது, பிரஜ்வல் தான் என்பதை உறுதிப்படுத்தினர். இதற்காக, நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறினர்.
இந்நிலையில் என்ன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வீடியோவில் இருப்பது பிரஜ்வல் தான் என்பதை, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் உறுதி செய்தனர் என்பது பற்றி தகவல் வெளியாகி உள்ளது.
கையில் மச்சம் பலாத்காரம் செய்த பெண்களை பிரஜ்வல் ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து உள்ளார். ஆனால், அதில் தனது முகத்தை காட்டவில்லை. மொபைல் போனை வலது கையில் வைத்து தான், வீடியோக்கள், புகைப்படங்களை எடுத்து உள்ளார். வீடியோ எடுத்த வலது கையில் இருந்த மச்சம், காய தழும்பு பிரஜ்வலிடம் இருந்ததை வைத்து எஸ்.ஐ.டி., விசாரித்தனர்.
ஆனால் புகைப்படங்களை திரித்து மச்சமும், காய தழும்பு சேர்க்கப்பட்டு உள்ளது என்று பிரஜ்வல் தரப்பு கூறியது. இதனால் ஆதாரங்களை வலுவாக திரட்டும் பணியில் எஸ்.ஐ.டி., அதிகாரிகள் ஈடுபட்டனர்.
துருக்கி நாட்டில், 'பிறப்பு உறுப்பு அம்சங்களில் உடற்கூறியல் ஒப்பீடு' என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வீடியோவில் இருப்பது பிரஜ்வலா என்று அடையாளம் காணும் பணியில் எஸ்.ஐ.டி., ஈடுபட்டது.
'ஸ்கிரீன் ஷாட்' பிறப்பு உறுப்பு அம்சங்களில் உடற்கூறியல் ஒப்பீடு தொழில்நுட்பம் என்பது, பிறப்பு உறுப்பை வைத்து, ஒரு நபரை அடையாளம் காணும் முறையாகும். பிரஜ்வலின் ஆபாச வீடியோக்களில் தெளிவு இல்லாத நிலையில் இருந்த அவரது பிறப்பு உறுப்பு, 'ஸ்கிரீன் ஷாட்' எடுக்கப்பட்டது.
அந்த ஸ்கிரீன் ஷாட் புகைப்படத்தை, 'பிறப்பு உறுப்பு அம்சங்களில் உடற்கூறியல் ஒப்பீடு' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உயர் தெளிவு திறன் கொண்ட புகைப்படங்களாக மாற்றினர்.
பின், விசாரணையின் ஒரு பகுதியாக பிரஜ்வலின் அந்தரங்க பாகங்கள், இடுப்பு பகுதி புகைப்படம் எடுத்து, ஸ்கிரீன் ஷாட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஆண் உறுப்பின் புகைப்படத்துடன் ஒப்பீடு செய்தனர். இந்த ஒப்பீடு தோல், சிறுநீரக டாக்டர்கள் மூலம் நடந்தது. ஸ்கிரீன் ஷாட் புகைப்படமும், போலீசார் எடுத்த புகைப்படமும் ஒரே நபரின் ஆண் உறுப்பு என்பதை உறுதிப்படுத்தியது. இதனால் வீடியோவில் இருப்பது, பிரஜ்வல் தான் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
பாவாடை துருக்கியில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த, 'பிறப்புப்பு அம்சங்களில் உடற்கூறியல் ஒப்பீடு' தொழில்நுட்பம், இந்தியாவில் பிரஜ்வல் வழக்கில் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரத்திற்கு உள்ளான பின், அவர் அணிந்திருந்த உள்ளாடையை அங்கேயே விட்டு சென்றுள்ளார்.
அந்த பாவாடையை போலீசார் கைப்பற்றிய போது, அதில் சில விந்தணுக்கள் இருந்தன. டி.என்.ஏ., சோதனையில், அந்த விந்தணு பிரஜ்வலுக்கு உரியது என்பதும் உறுதி செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் வீடியோக்களை சேகரித்து வைக்க, 100 பென் டிரைவ்களையும், ஒரு புதிய மடிக்கணினியையும் எஸ்.ஐ.டி., அதிகாரிகள் வாங்கியதும் தெரியவந்து உள்ளது.