ADDED : ஏப் 20, 2026 02:17 AM

மைசூரு: மைசூரு மாவட்டம், சரகூர் தாலுகா குர்னேகாலா கிராமத்தில் வசித்தவர் ஜவரப்பா, 32. மனைவி அம்ருதா, 2 6 தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். 12 நாட்களுக்கு முன், தன் தாய் ஊரான நஞ்சன்கூடின், ஹாட்யா கிராம திருவிழாவுக்காக கு ழந்தைகளுடன் அம்ருதா சென்றிருந்தார்.
கடந்த 16ல், குழந்தைகளை பார்த்து வருவதாக கூறி சென்ற ஜவரப்பா, மீண்டும் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலையில் குர்னேகாலா கிராமத்தின் அருகில், சாலை ஓரத்தில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
சரகூரு போலீசார் விசாரணையில், மனைவியே கொலையாளி என்பது, தெரிய வந்தது. மைசூரின், மாவினஹள்ளி கிராமத்தின் சித்தேஷ், 32, என்பவருடன் அம்ருதாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. கணவருக்கு தெரிந்தால், பிரச்னை ஏற்படும் என்ற பீதியில், கணவரை கொல்லும்படி சித்தேஷை, அம்ருதா துாண்டி விட்டார்.
மனைவி ஊருக்கு வந்த ஜவரப்பாவை, தாக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்ததை, விசாரணையில் ஒப்புக்கொண்டனர். அம்ருதா, சித்தேஷ் கைது செய்யப்பட்டனர்.
