ADDED : மார் 26, 2026 12:48 AM
தேவனஹள்ளி: கணவருக்கு நடக்கவிருந்த இரண்டாவது திருமணத்தை, போலீசுடன் வந்து மனைவி தடுத்து நிறுத்தினார்.
சிக்கபல்லாபூர் தாலுகா கடாரி கிராமத்தில் வசிப்பவர் சுரேஷ், 44. இவருக்கும், ஆந்திராவின் மஞ்சனஹள்ளி கிராமத்தின் நாகமணி, 42 என்பவருக்கும், 19 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு மகன்கன் உள்ளனர். குடு ம்ப தகராறில் மனைவியை பிரிந்த கணவர், 10 ஆண்டுகளாக தனியாக வசிக்கிறார். இந்நிலையில் சு ரேஷ் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்தார். பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி தாலுகா கோடகுர்கி கிராமத்தில் வசிக்கும் 37 வயது பெண்ணுக்கும், சுரேஷுக்கும் நேற்று முன்தினம் திருமண நிச்சயம் நடந்தது.
இவர்கள் திருமணம் நேற்று கோவிலில் நடக்க இருந்தது. இதுபற்றி அறிந்த நாகமணி, தேவனஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். தன்னை விவாகரத்து செய்யாமல், கணவர் 2வது திருமணம் செய்வது பற்றி, போலீசாரிடம் கூறினார். இதையடுத்து நாகமணியுடன் சென்ற போலீசார், சுரேஷுக்கு நடக்க இருந்த 2வது திருமணத்தை நிறுத்தினர். சுரேஷ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
