/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தலக்காவிரியில் இன்று தீர்த்த உத்சவம்
/
தலக்காவிரியில் இன்று தீர்த்த உத்சவம்
ADDED : அக் 16, 2025 11:23 PM

குடகு: குடகில் இன்று தலக்காவிரி தீர்த்த உத்சவம் வெகு விமரிசையாக நடக்கிறது. பக்தர்கள் பார்க்கும் வகையில், ஐந்து எல்.இ.டி., திரைகள் பொருத்தப்பட்டுள்ளன.
குடகு மாவட்டம் நாபோக்லுவில் உள்ள காவிரி உற்பத்தி இடமான தலக்காவிரியில் இன்று மகர லக்னத்தில் மதியம் 1:44 மணிக்கு தலக்காவிரி தீர்த்த உத்சவம் நடக் கிறது.
உத்சவத்தை காண, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
பக்தர்கள் வசதிக்காக, தீர்த்த உத்சவத்தை காணும் வகையில், கோவிலில் ஐந்து எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன. நான்கு இடங்களில் மொபைல் கழிப்பறை நிறுவப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தெப்பக்குளத்தை சுற்றி 10 அடி உயரத்தில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோவிலில் உள்ள 45 கேமராக்களுடன் கூடுதலாக 50 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கன்னடம், கலாசார துறை, கொடவா சாகித்ய அகாடமி சார்பில் கலாசார நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆயிரக்கணக்கான மின் விளக்குகளால் கோவில் வளாகம் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
பாகமண்டலாவில் இருந்து தலக்காவிரிக்கு இலவச பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. காவிரி அன்னையை தரிசிக்க வரும் பக்தர்கள், மழை, வெயிலில் இருந்து பாதுகாக்கும் வகையில் வரிசையாக சென்று தரிசனம் செய்ய நிரந்தர நிழல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
நாபோக்லுவில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.