/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எம்.எல்.ஏ., அலுவலகத்தில் திருட்டு
/
எம்.எல்.ஏ., அலுவலகத்தில் திருட்டு
ADDED : ஜூலை 18, 2025 11:31 PM

விஜயநகரா: சுயேச்சை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் உள்ள லாக்கரில் இருந்த பணம், தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விஜயநகரா, ஹரப்பனஹள்ளி தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., லதா மல்லிகார்ஜுன். இவரது அலுவலகம், நகரில் உள்ள காசி சங்கமேஷ் லே - அவுட்டில் அமைந்துள்ளது.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு அலுவலகத்திற்குள் கதவை உடைத்து மர்ம நபர்கள் புகுந்து, லாக்கரில் இருந்த பணம், நகைகளை திருடிச் சென்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி., ஜானவி ஆய்வு செய்தார். ஹரப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
லாக்கரில் வைத்திருந்த 2.50 லட்சம் ரூபாயும், 10.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் திருடப்பட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.