ADDED : ஜூன் 01, 2026 12:15 AM
அ நிறம் | அளவு
முல்பாகல்: முல்பாகலின் ரஹமத்ஹள்ளி அருகே உள்ள பாபனகாரி கிராமத்தில், மர்ம கும்பல், ஒரு வீட்டின் பூட்டை உடைத்து, 3.5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பட்டு சேலைகளை திருடி சென்றது.
முல்பாகலில் உள்ள பாபனகாரி கிராமத்தில் வசித்து வருபவர் சீத்தம்மா, 70. இவர், தன் வீட்டை பூட்டி, குடும்பத்தினருடன் மே 23ல், வெளியூர் சென்றார். மே 30ம் தேதி இரவு வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
மர்ம நபர்கள், வீட்டிற்குள் புகுந்து, 3.5 கிலோ எடையுள்ள வெள்ளி கடவுள் சிலைகள் உள்ளிட்ட வெள்ளி பொருட்கள், விலை உயர்ந்த பட்டு சேலைகள் ஆகியவற்றை திருடி சென்றதாக தெரிகிறது.
