/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'சித்து மனைவிக்கு நிலம் ஒதுக்கியதில் சட்டவிரோதம் இல்லையாம் '
/
'சித்து மனைவிக்கு நிலம் ஒதுக்கியதில் சட்டவிரோதம் இல்லையாம் '
'சித்து மனைவிக்கு நிலம் ஒதுக்கியதில் சட்டவிரோதம் இல்லையாம் '
'சித்து மனைவிக்கு நிலம் ஒதுக்கியதில் சட்டவிரோதம் இல்லையாம் '
ADDED : செப் 07, 2025 02:32 AM
பெங்களூரு: 'முதல்வர் சித்தராமை யா மனைவி பார்வதிக்கு, முடா 14 வீட்டுமனைகளை ஒதுக்கியதில் எந்த சட்டவிரோதமும் நடக்கவில்லை' என, ஓய்வு நீதிபதி தேசாய் தலைமையிலான விசாரணை ஆணையம் கூறி உள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியிடம் இருந்து, மைசூரு கெசரே கிராமத்தின் 3.16 ஏக்கர் நிலத்தை மேம்பாட்டுப் பணிக்காக, 1994ல் முடா கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக மைசூரு விஜயநகரில் 56 கோடி ரூபாய் மதிப்பிலான 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டது.
சித்தராமையா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, விலை உயர்ந்த வீட்டுமனைகள் வாங்கியதாக, சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா, கவர்னர் தாவர்சந்த் கெலாட், மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
நீதிமன்ற உத்தரவில் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவானது. லோக் ஆயுக்தா விசாரித்தனர். இதற்கிடையில் 14 வீட்டுமனைகளையும், முடாவிடம், பார்வதி திரும்ப கொடுத்தார். முடா வழக்கில் சித்தராமையா உட்பட 4 பேர் மீதும் தவறு இல்லை என்று, நீதிமன்றத்தில், லோக் ஆயுக்தா அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
முடாவில் 50:50க்கு அடிப்படையில் வீட்டுமனை ஒதுக்கியதில், பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, பா.ஜ., தலைவர்கள் குற்றச்சாட்டு கூறியதால், ஓய்வு நீதிபதி தேசாய் தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் அரசிடம் சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையில், 'சித்தராமையா மனைவிக்கு முடா நிலம் ஒதுக்கியதில், எந்த சட்டவிரோதமும் நடக்கவில்லை; முடா அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளனர். 50:50க்கு அடிப்படையில் வீட்டுமனை ஒதுக்கும் திட்டத்தை, கைவிட வேண்டும்' என, அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாக, தகவல் வெளியாகி உள் ளது.