தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிவகுமார் பெயரில் இருப்பது ஒரே ஒரு கார் மட்டுமே!

 சிவகுமார் பெயரில் இருப்பது ஒரே ஒரு கார் மட்டுமே!

 சிவகுமார் பெயரில் இருப்பது ஒரே ஒரு கார் மட்டுமே!


ADDED : மே 30, 2026 12:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 12:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகாவின் அடுத்த முதல்வரும், பணக்கார அரசியல்வாதியுமான சிவகுமாரிடம், ஒரே ஒரு கார் தான் உள்ளது.

நாட்டின் பணக்கார அரசியல்வாதிகளில் சிவகுமாரும் ஒரு வர். முந்தைய தேர்தல்களில் அவர் தாக்கல் செய்துள்ள, சொத்து விபரங்களின்படி அவருக்கு, 1,413 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.

இந்த அளவுக்கு வசதி கொண்ட அவரிடம், ஒரே ஒரு கார் மட்டுமே உள்ளது என்ற ஆச்சரியமான தகவல் வெளியாகியுள்ளது. அவரது பெயரில் ஒரே ஒரு கார் மட்டுமே பதிவாகியுள்ளது. அந்த கார் கோடிக்கணக்கான ரூபாய் விலையுள்ள அதிநவீன வசதிகள் கொண்ட, சொகுசு கார் அல்ல.

கடந்த 24 ஆண்டுகளுக்கு முன், அவர் வாங்கிய 'டயோட்டா குவாலிஸ்' கார் தான். அதன் இப்போதைய விலை 8.35 லட்சம் ரூபாய். இது அவர் வாங்கிய முதல் கார்.

இந்திய மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளில், 15 ஆண்டுகளுக்கும் அதிக பழமையான, எந்த காரையும் பொது சாலைகளில் ஓட்டுவதற்கு அனுமதி இல்லை. எனவே சிவகுமார் தற்போது அந்த காரை பயன்படுத்துவது இல்லை.

ஆனால் அதன் மீது உணர்வு பூர்வமான பந்தம் வைத்துள்ள அவர், தன் கேரேஜில் காரை நிறுத்தி வைத்துள்ளார்; நல்ல முறையில் பராமரித்து வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us