/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வலிப்பு நோயால் சிக்கிய திருடர்கள்
/
வலிப்பு நோயால் சிக்கிய திருடர்கள்
ADDED : ஜூலை 28, 2025 03:34 AM
பெங்களூரு :  திருட வந்த நபருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதால், அவர் மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்றும் போது, மற்றொரு திருடன் பொது மக்களிடம் சிக்கினார்.
உடுப்பி நகரின், கடியாளா கிராமத்தில் மஹிஷாசுரமர்த்தினி கோவில் உள்ளது. நேற்று அதிகாலை 3:00 மணியளவில், இரண்டு நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். திருட முயற்சித்த போது, காவலாளி தடுத்து கூச்சல் போட்டார். கத்தியை காண்பித்து அவரை மிரட்டி விட்டு, தப்பியோட முயற்சித்தனர்.
அப்போது அவர்களில் ஒருவர், வலிப்பு நோ ய் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்ற கூட்டாளி முயற்சித்தார்.
காவலாளியின் கூச்சலை கேட்டு, அப்பகுதியினர் வந்து இரண்டு திருடர்களையும் பிடித்தனர். வலிப்பு நோய் ஏற்பட்டிருந்தவரின் கையில் இரும்பு கம்பி கொடுத்து, முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் சேர்த்தனர். மற்றொருவரை உடுப் பி நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், திருட வந்தவர்களின் பெயர் கிரண், 32, விஷ்ணு, 34, என்பது தெரிந்தது. இவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள்.
திருடும் நோக்கில் கோவிலுக்குள் புகுந்ததை ஒப்புக்கொண்டனர். விஷ்ணுவுக்கு வலிப்பு வந்து விழுந்ததால், இருவரும் சிக்கினர்.

