/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மூன்றாவது குழந்தையும் பெண்; மனைவியை விட்டு கணவர் ஓட்டம்
/
மூன்றாவது குழந்தையும் பெண்; மனைவியை விட்டு கணவர் ஓட்டம்
மூன்றாவது குழந்தையும் பெண்; மனைவியை விட்டு கணவர் ஓட்டம்
மூன்றாவது குழந்தையும் பெண்; மனைவியை விட்டு கணவர் ஓட்டம்
ADDED : ஜன 05, 2026 05:43 AM

பெங்களூரு: மூன்றாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் மனைவியையும், குழந்தைகளையும் விட்டு விட்டு வேறு பெண்ணுடன் கணவர் ஓடிவிட்டார்.
ராஜஸ்தானை சேர்ந்தவர் ஹரிஷ், 34. இவரது மனைவி, ஆந்திராவை சேர்ந்த வரலட்சுமி, 30. இவர்களுக்கு 2014ல் திருமணம் நடந்தது. அடுத்தடுத்து, இரண்டும் பெண் குழந்தைகளாக பிறந்தன. மூன்றாவதாக மனைவி கர்ப்பமடைந்த போது, ஆண் குழந்தை பிறக்கும் என, எதிர்பார்த்தார். ஒன்றரை மாதத்துக்கு முன், பெண் குழந்தை பிறந்ததால், ஹரிஷின் கோபம் அதிகரித்தது.
ஓராண்டாகவே மனைவியை ஒதுக்கி வைத்தார். வீட்டுக்கு வருவது இல்லை. வேறொரு பெண்ணுடன் ஹரிஷ் ஓடிவிட்டார்.
தென் கிழக்கு மண்டல மகளிர் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்துள்ள வரலட்சுமி கூறியதாவது:
மூன்றும் பெண் குழந்தையாக பிறந்ததால், என் கணவர் எங்களை உதறிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் 10 லட்சம் ரூபாய் கடன் வைத்துள்ளார். குழந்தைகளை எப்படி வளர்ப்பது. போலீசில் புகார் அளித்து, ஒரு மாதமாகியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
என் கணவர் குடும்பத்தினரிடம் பணம் வாங்கி கொண்டு அவர்கள் மவுனமாக உள்ளனர் . என் கணவர் பணியாற்றிய பார்மசியினரே, அவரை துாண்டி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

