/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'புல்லட்' பைக்குகள் திருடிய திருவண்ணாமலை நபர் கைது
/
'புல்லட்' பைக்குகள் திருடிய திருவண்ணாமலை நபர் கைது
'புல்லட்' பைக்குகள் திருடிய திருவண்ணாமலை நபர் கைது
'புல்லட்' பைக்குகள் திருடிய திருவண்ணாமலை நபர் கைது
ADDED : நவ 12, 2025 07:46 AM

ஆடுகோடி: புல்லட் பைக்குகளை குறிவைத்து திருடிய, திருவண்ணாமலை நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு, வில்சன் கார்டனில் வசிக்கும் நரசிம்ம ரெட்டி என்பவரின், 'புல்லட்' பைக் கடந்த மாதம் திருடு போனது. அவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஆடுகோடி போலீசார் விசாரித்தனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், தமிழகத்தின் திருவண்ணாமலை எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த குப்புசாமி, 38, என்பவர், கடந்த 6ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இவரிடம் நடத்திய விசாரணையில், பெங்களூரு நகரின் பல இடங்களில் 'புல்லட்' பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடியது தெரிந்தது. இவர் கொடுத்த தகவலின்படி, திருவண்ணாமலை, வேலுார் மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்ட 42 புல்லட் பைக்குகளை, ஆடுகோடி போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 1 கோடி ரூபாய்.
திருவண்ணாமலையில் இருந்து பஸ்சில் பெங்களூரு வரும் குப்புசாமி, லாக்கை உடைத்து 'புல்லட்' பைக்குகளை திருடுவார். பின், பைக்குகளை சாலை வழியாக தன் ஊருக்கு ஓட்டிச் சென்று, உறவினர்கள், நண்பர்களுக்கு விற்றது தெரிந்தது. இவர் கைதானதன் மூலம் ஆடுகோடி, பேட்ராயனபுரா, சித்தாபுரா, விவேக்நகர், பையப்பனஹள்ளி, கே.ஜி., நகர், பொம்மனஹள்ளி, சாம்ராஜ்பேட், காட்டன்பேட், மடிவாளா உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பதிவான, 37 பைக் திருட்டு வழக்குகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது.
திருடப்பட்டதில் சில பைக்குகளின் இன்ஜின், சிசி நம்பரை மாற்றி விற்பனை செய்ததும் தெரிந்தது. இதுதொடர்பாக திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு கடிதம் எழுத உள்ளதாக, பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் கூறி உள்ளார்.

