UPDATED : நவ 13, 2026 12:00 AM
ADDED : நவ 12, 2026 07:24 PM
அ நிறம் | அளவு
தங்கவயல்: துணை மின் நிலையம் அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகள், இழப்பீடு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தங்கவயல் தொட்டக்காரி கிராமத்தில், துணை மின் வினியோக மையம் அமைக்க, பெஸ்காம் நிறுவனத்துக்கு விவசாயிகள் நிலம் வழங்கினர். அவர்களுக்கு. நிலத்துக்குரிய இழப்பீடு தொகையை, பெஸ்காம் நிறுவனம், 10 ஆண்டுகளாக வழங்கவில்லை.
இந்நிலையில், இழப்பீடு வழங்க கோரி, அந்த விவசாயிகள், தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலாவிடம் நேற்று கோரிக்கை விடுத்தனர்.
பின், எம்.எல்.ஏ., ரூபகலா கூறுகையில், ‘‘விவசாய நிலத்திற்கான இழப்பீடு பிரச்னையை உள்ளூர் பெஸ்காம் அதிகாரிகளால் தீர்க்க முடியாது. எனவே, அமைச்சரை சந்தித்து இழப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்வேன்,’’ என்றார்.
