/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பாக்., ஆதரவு கோஷம் எழுப்புபவர்களை செருப்பால் அடிக்கணும்; எத்னால் ஆவேசம்
/
பாக்., ஆதரவு கோஷம் எழுப்புபவர்களை செருப்பால் அடிக்கணும்; எத்னால் ஆவேசம்
பாக்., ஆதரவு கோஷம் எழுப்புபவர்களை செருப்பால் அடிக்கணும்; எத்னால் ஆவேசம்
பாக்., ஆதரவு கோஷம் எழுப்புபவர்களை செருப்பால் அடிக்கணும்; எத்னால் ஆவேசம்
ADDED : மே 01, 2025 05:34 AM

விஜயபுரா: ''இந்தியாவில் இருந்து கொண்டு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்புபவர்களை செருப்பால் அடிக்க வேண்டும்,'' என்று, எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறினார்.
விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி: பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தான் மீது, பிரதமர் நரேந்திர மோடி கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று, எனக்கு நம்பிக்கை உள்ளது.
ஹிந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம் இது. கலபுரகியில் சாலையில் ஒட்டப்பட்ட பாகிஸ்தான் கொடியை, ஒரு சமூக பெண்கள் அகற்றுகின்றனர்.
விதான் சவுதாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் போடுகின்றனர். இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்புபவர்களை செருப்பால் அடிக்க வேண்டும். செருப்பால் அடிப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டால், வழக்குக்கு ஆகும் செலவை நான் பார்த்து கொள்கிறேன்.
பசவண்ணர் ஜெயந்தியை கூடலசங்கமாவில் அரசு கொண்டாடுவதில், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் பசவண்ணர் பிறந்த பசவனபாகேவாடி, பசவகல்யாணியிலும் கொண்டாடி இருக்க வேண்டும். இதை கண்டிப்பாக அரசால் செய்ய முடியும்.
பசவனபாகேவாடியில் பசவண்ணர் ஜெயந்தியை கொண்டாட வேண்டும் என்று அரசிடம் கூறும் அளவுக்கு, அமைச்சர் சிவானந்த பாட்டீலுக்கு தைரியம் இல்லை. எதற்கும் லாய்க்கு இல்லாதவர்களை பற்றி பேசி என்ன பயன். சிவானந்த பாட்டீலுக்கு கொள்ளை அடிப்பது எப்படி என்று தான் தெரியும். என்னை பற்றி பேசும் அவர், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யட்டும். பசவனபாகேவாடி தொகுதியில் அவருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.